முகா உயர்பீடக் கூட்டத்தில் நடந்தது என்ன? மகிந்தவுக்காக குரல் கொடுத்தோர் யார்? - Sri Lanka Muslim

முகா உயர்பீடக் கூட்டத்தில் நடந்தது என்ன? மகிந்தவுக்காக குரல் கொடுத்தோர் யார்?

Contributors
author image

ஊடுருவி

முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீடக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது. நல்லிரவு வரை இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்து உயர் பீடத்தினரிடம் கருத்து கோரப்பட்டது. உயர்பீடத்தில் 80வீதமானோர் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்ச அறிவிக்கப்பட்டால் அவருக்கு ஆதரவு அளிக்க கூடாது என்றும் அந்த நிமிடமே முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டும் வெளியேற வேண்டும் என்றும் உரத்துக் கூறினர்.

 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீர் ஒரு படி மேலாக சென்று கடும் தொணியில் முகா இன்றே அரசைவிட்டு வெளியேற வேண்டும் என கோசமெளுப்பினார். செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட உயர்பீட உறுப்பினர்களான சட்டத்தரணி கபூர் , அட்டாளைச்சேனை பழீல் அக்கரைப்பற்று நசார் ஹாஜி ஆகியோரும் மாகாணசபை உறுப்பினர் நஸீருடன் இணைந்து அரசுக்கு எதிராக கோசமிட்டனர்.

 

இவற்றையெல்லாம் அமைதியாக செவிமடுத்துக்கொண்டிருந்த முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பட்டும் படாமலும் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதராவாக கருத்துக்கூறியதுடன் மக்களிடம் இது பற்றி எடுத்துக் கூறி அவர்களிடம் கருத்துக்களை அறிவோம். அதன் பின்பு இறுதி முடிவு எடுப்போம் என்றார்.

 
இதன் போது குறிக்கிட்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்ஸுர் — மக்களிடம் சென்று அவர்களின் கருத்துக்களை அறிய வேண்டிய தேவை எமக்கு இல்லை. நாம் எடுக்கும் முடிவைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும்  என்றும் அரசுக்கும் ரவூப் ஹக்கீமுக்கும் சார்பாக கருத்துக்களை கூறினார்.

 

மன்ஸுர் , தொடர்ச்சியாக அரசுக்கு சார்பாக கருத்துக் கூறி செல்வதை அவதானித்த உயர்பீட உறுப்பினர்கள் பலர் —‘நீங்கள் எப்போதும் அரசுக்குச் சார்பானவர்தான்: ஜனாதிபதி மகிந்தவுக்கு அடிமையானவர்தான் நீங்கள்;: மக்களை பற்றியும் சமுகத்தை பற்றியும்  உங்களுக்கு கவலை இல்லை தானே என்று கூறிகொதித்தெழுந்த உயர்பீட உறுப்பினர்கள் பலர் மன்ஸூரை பேச விடாமல் இரி இரி என சத்தமிட்டு அவரை அமரச் செய்தனர்.

 

இந்த வேளை குறுக்கிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் மன்ஸூரை காப்பாற்றுவது போன்று — அவரும் அரசுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார். இவரின் அந்தக் கருத்துக்கள் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்லிக்கொடுத்து பேசவைத்ததைப் போன்று இருந்துள்ளது.

 

இவ்வாறான அமளிதுமளிக்கு மத்தியில் செயலாளர் நாயகம் ஹசன் அலியும் அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி அவ்வப்போது ஹக்கீமுடன் முரண்பட்டும் கொண்டார்.
இதன்பிற்பாடே அம்பாறை முகா மத்திய குழுவை கூட்டி முதற்கட்டமாக அம்மாவட்ட மக்களின் கருத்தை அறிவதென தீர்மானிக்கப்பட்டது.

 

அதன் படி இன்று இரண்டாம் திகதி மாலை அம்பாரை மாவட்ட முகா மத்திய குழுவின் கூட்டம் இடம்பெறவுள்ளது. முகா வின் இந்த உயர்பீட கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த, சிரேஷ்ட உயர்பீட உறுப்பினர் ஒருவர், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் மகிந்த ராஜபக்சவுக்கே ரவூப் ஹக்கீம் ஆதரவு வழங்குவார் என்பது அவர் உயர் பீட கூட்டத்தின் போது நடந்து கொண்ட முறையைப் பார்த்து அறிய முடிகின்றது. மட்டுமன்றி — அந்த ஆதரவு தரும் முடிவை மகிந்தவுக்கு வழங்கி விட்டே மறுநாள் ரவூப் ஹக்கீம் உம்ரா பயணமானார் என்றும் ஆதார பூர்வமாக சுட்டிக்காட்டினார்.

Web Design by Srilanka Muslims Web Team