முக்கிய தகவல்களை வெளியிடப் போகும் அமைச்சர்கள் - அவசர செய்தியாளர் சந்திப்பு இன்று! - Sri Lanka Muslim

முக்கிய தகவல்களை வெளியிடப் போகும் அமைச்சர்கள் – அவசர செய்தியாளர் சந்திப்பு இன்று!

Contributors

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் அவசர செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.

அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துக்கொண்ட அமைச்சர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பி் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவும் கலந்து்ககொள்ள உள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பாகவும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருவது பற்றியும் எதிர்கால அரசியல் விடயங்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை இவர்கள் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும், முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் ஆலோசகருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும்  அந்த கட்சி தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியது.

இவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில், சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தை மீறி, வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team