முசலி கலாசாரா விழா: நித்திலம் சஞ்சிகை வெளியீடு » Sri Lanka Muslim

முசலி கலாசாரா விழா: நித்திலம் சஞ்சிகை வெளியீடு

Contributors
author image

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)

முசலி பிரதேச செயலகத்தில் கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு கேதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது.நிகழ்வின்; பிரதம அதிதியாக திருமதி; ஸ்ரான்லி டிமெல் அவர்கள் கலந்துகொண்டார். கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

அதைத் தொடர்ந்து நித்திலம் சஞ்சிகை(02) வெளியிடப்பட்டது உத்தியோக பூர்வமாக பிரதம அதீதிக்கு சஞ்சிகை கையளிக்கபப்ட்டது. இதில் கதை ,கவிதை ,கட்டுரை ,துணுக்குகள் ,குறுநாடகம் எனப்பல அம்சங்கள் அடங்கியதுடன் கலைஞர்களின் அறிமுகப்பக்கங்களும் அடங்கியிருந்தன.

நித்திலம் என்பது முத்து முத்துக் குளித்தல் கொடிகட்டிப்பறந்த முசலியின் புகழை பறைசாற்றவே இப்பெயர் சஞ்சிகைக்கு இடப்பட்டது. 68 பக்கங்களைக் கொண்ட சஞ்சிகையின் நூலாய்வை கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அலிகான் ஷரீப்(அமுதன்) கவிநடையில் நிகழ்த்திப் பாராட்டைப் பெற்றுக்கொண்டார். நூலின் மதிப்புரையை கலைஞர் கே.சி.எம்.அஸ்ஹர் நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து கலைஞர்கள்,பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.கலைஞர்களானஅலிகான் ஷரீப், கே.சி.எம்.அஸ்ஹர் ,பே.பி.கிறிஸ்தோப்பு, எஸ்.எம்.அன்சார், பி.எம்.முஜீபுர் ரஹ்மான்.போன்றோர் முசலியின் ஆணிமுத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக மாவட்டச் செயலாளர் தமது உரையில் கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியம்,இனவுறவு போன்றவற்றின் பெறுமானம் போன்றவற்றை பெரிதும் வலியுறுத்தியதுடன். முஸ்லிம் சகோதரர்களின் சிலம்படி நிகழ்ச்சியை பெரிதும் எதிர்பார்த்தேன் இங்கு காணக்கிடைக்கவில்லை .இனிவரும் காலங்களில் மூவின மக்களினதும் கலை நிகழ்வுகள் கட்டாயம் இடம்பெற வேண்டும்.முசலிப்பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பெரிதும் உதவிவரும் இவ்விருவரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் முற்போக்கு அபிவிருத்தித் திட்டங்களுக்கு பெரிதும் ஒத்துழைப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

வீதியுலா , கலைநிகழ்ச்சிகள் யாவும் பெரிதும் பார்வையாளர்களை கவர்ந்ததை காணமுடிந்தது. இந்நிகழ்வை சிறப்பாக ஒழுங்குபடுத்திய கலாசார உத்தியோகத்தர்களான க.கயல்விழி,மேரி சிபிலா சில்வா ஆகியோர் பாராட்டப்பட வேண்டியர்கள்.நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர் ம.சஹீது, கணக்காளர்,திட்டமிடல் உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர்கள் ,முகாமைத்துவ உதவியாளர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள்,பெற்றோர்,சமூக நிறுவன பிரதிநிதிகள்; போன்ற பலரும் கலந்து சிறப்பித்தனர்.

mu 

Web Design by The Design Lanka