முதன்முறையாக விண்வெளி பயணத்தில் சவுதி வீராங்கனை! - Sri Lanka Muslim

முதன்முறையாக விண்வெளி பயணத்தில் சவுதி வீராங்கனை!

Contributors

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) 10 நாள் பயணத்தில் அலி அல்-கர்னியுடன் (Ali Al-Qarni) ரய்யானா பர்னாவி (Rayyana Barnawi) இணைவார் என்று அதிகாரப்பூர்வ சவுதி செய்தி நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது.

தனியார் விண்வெளி நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸின் (Axiom Space) பணியின் ஒரு பகுதியாக இருவரும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறக்கிறார்கள்.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த அறிவிப்பின் மூலம், சவூதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியது. 2019-ஆம் ஆண்டில் தனது குடிமக்களில் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பிய முதல் அரபு நாடு ஐக்கிய அரபு அமீரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பர்னாவி மற்றும் அல்-கர்னியுடன் பெக்கி விட்சன் (Peggy Whitson) இணைகிறார், அவர் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் ஆவார். அவர் ISS-க்கு நான்காவது முறையாக பயணிக்கிறார். அவர்களுடன் விமானியாக பணியாற்றும் Tennessee-ஐ சேர்ந்த தொழிலதிபர் ஜான் ஷோஃப்னர் விண்வெளிக்கு செல்கிறார்.

பல சீர்திருத்தங்களைச் செய்துவரும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2016-ஆம் ஆண்டிலிருந்து பணிபுரியும் பெண்களின் விகிதம் 17 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாக இருமடங்காக அதிகரித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team