முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு 13 அமைச்சுப் பொறுப்புக்கள்! - Sri Lanka Muslim

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு 13 அமைச்சுப் பொறுப்புக்கள்!

Contributors

(எம்.ஜே.எம். தாஜுதீன்)

வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்- தனக்கு வழங்கப்பட்ட 13  முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வட மாகாண சபையின் நிதி திட்டமிடல்- சட்டம் மற்றும் ஒழுங்கு- காணி மற்றும் வீதி அபிவிருத்தி- மின்சாரம்- வீடு மற்றும் கட்டுமாணம்- நீர்பாசனம்- நுகர்வோர் அபிவிருத்தி- சமூக சேவை மற்றும் புனர்வாழ்வு- மகளிர் விவகாரம்- தொழில் மற்றும் விவசாய அபிவிருத்தி- சுற்றுலா- உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்- நிர்வாக மற்றும் உணவு விநியோக அமைச்சுப் பொறுப்புக்கள் வட மாகாண சபை முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன- அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா- சுசில் பிரேமஜயந்த்- டளஸ் அழகப்பெரும- அநுர பிரியதர்ஷன யாப்பா- வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

vignesh-5

Web Design by Srilanka Muslims Web Team