முதிய வயதுடைய ஹாஜிக்கு சிறப்பாக ஹஜ் செய்ய உதவும் பொலிஸ் அதிகாரி - Sri Lanka Muslim

முதிய வயதுடைய ஹாஜிக்கு சிறப்பாக ஹஜ் செய்ய உதவும் பொலிஸ் அதிகாரி

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அ(z)ஸ்ஹான் ஹனீபா


ஹஜ் கடமைகள் ஆரம்பமாகயிருக்கும் நிலையில்…
நன்றி செலுத்தும் முகமாக , ஒரு முதியவரான ஹாஜி தன்னை சிறப்பாகக் கவனித்து உதவி செய்த பாதுகாப்பு அதிகாரியை கட்டித்தழுவி கண்ணீர்மழ்க அழும் காட்சி…

இதுவல்லவா பாதுகாப்பு அதிகாரியின் மனிதம் மற்றும் இஸ்லாம் கூறிநிற்கும் நற்குணம்

இக்கடமைப்பாங்கான ஈமானிய சகோதரத்துவம் நிறைந்த பாதுகாப்பு அதிகாரிகளை ஸஊதியில் அதிகம் அதிகம் எம்மால் காணமுடியும்.
யாருடனும் கடிந்துவிழாத இன்முகத்தோடு மக்களுடன் நல்லமுறையில் பழகும் தன்மை கொண்டவர்களே ஸஊதிய பாதுகாப்பு அதிகாரிகள்.

எமது நாட்டில் பாதுகாப்பு அதிகாரிக்கருகில் சென்றால் பயப்படும் நாம் ஸஊதியில் அவர்களுக்கு அருகில் தாராளமாக எவ்வித பயமுமின்றி செல்லலாம், அத்தோடு அங்கு அறிமுகமற்ற ஊர்களுக்கு செல்லும் போது எம்முடன் கூடவே வந்து பாதைகளை வழிகாட்டிவிட்டுச் செல்பவர்கள், இதனை நாம் மதீனாவிலிருந்து சுமார் 900 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தபூகுக்கு சென்ற தருணத்தில் உணரமுடிந்தது.

ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளுக்காக வரும் யாத்திரீகர்களோடு கடமையுணர்வுடனும் அன்பாகவும் பண்பாகவும் அவர்களை நடாத்தி உரிய சேவைகளை உடனுக்குடன் மும்முரமாக நிறைவேற்றும் நல்லுள்ளம் கொண்டவர்கள் தான் இந்த ஸஊதிய முப்படை அதிகாரிகள்.

வல்லவன் அல்லாஹ் இவர்களுக்கு சிறந்த நற்கூலிகளையும் வெகுமதிகளையும் கொடுத்தருள்வானாக! ஆமீன்

haj

Web Design by Srilanka Muslims Web Team