முத்தையா முரளிதரனின் கருத்தை சகலரும் போற்றி கெளரவிக்க வேண்டும் - விமல் வீரவன்ச - Sri Lanka Muslim

முத்தையா முரளிதரனின் கருத்தை சகலரும் போற்றி கெளரவிக்க வேண்டும் – விமல் வீரவன்ச

Contributors

பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் பற்றியும் இலங்கை பற்றியும் சனல் 4 நேர்முகம் கண்டபோது முத்தையா முரளிதரன் தெரிவித்த கருத்தை முழு இலங்கையர்களும் இணைந்து கெளரவிக்க வேண்டும். இதற்காக முரளியை பாராட்ட வேண்டும்.

முழு உலகில் உள்ள மக்கள் இன்றும் காலம்சென்ற வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக்கு கொடுக்கும் கெளரவம்போன்று சமமானதொரு கெளரவத்தை இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கும் கொடுக்கின்றனர் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சனிக்கிழமை 23ம் திகதி மாளிகாவத் தையில் திசாநாயக்கவத்தையில் உள்ள 31 வருட காலம் பழைமைவாய்ந்த தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தை 153 இலட்சம் ரூபா செலவில் நவீனமயப்படுத்தும் திட்டத்தினை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளசியும் கலந்து சிறப்பித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்ததாவது:-

இந்த நாட்டின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரும் நற்குணமுள்ள இலங்கையின் ஒரு சொத்தாகவும் எமது பெளத்த இனத்தின் தமிழ் சகோதரப் பிரஜையாகவும்தான் முத்தையா முரளிதரனை நாம் நோக்குகின்றோம். இந்த நாட்டில் உள்ள கலைஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் தமது தாய் நாட்டு மொழியான சிங்கள மொழி மூலமே தமது படைப்புக்களை படைக்கின்றனர்.

அவர்கள் இந் நாட்டில் உள்ள சிங்களமொழி தெரிந்த மக்கள் மத்தியிலேயேதான் பிரபல்யம் அடைகின்றனர். ஆனால் விளையாட்டு வீரர்களது திறமைகள் முழு உலகுக்கும் ஒரு மொழியாக அடையாளப்படுத்தப் படுகின்றது.

அவர்கள் பெயர்கள் முழு உலகுக்குமே பிரபல்யப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் முத்தையா முரளிதரன் இந்த நாட்டின் சிறந்ததொரு பிரஜை. அவரது கருத்துக்களை அவர் சர்வதேச ஊடகங்கள் ஊடாகச் செல்லும் போது நாட்டின் யதார்த்தத்தை உலக மக்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள். இதற்காக இந்த நாட்டில் வாழும் மக்கள் முத்தையா முரளிதரன் போன்றோருக்கு கெளரவமளிக்க வேண்டும்.

முரளிதரன் பிரித்தானிய பிரதம மந்திரிக்கு சொல்லியகருத்துக்களையும் சனல் 4க்கு தெரிவித்த கருத்துக்களையும் தற்பொழுது தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனோகணேஷன் போன்றோர் விமர்சிக்கின்றனர். அவருக்கு எதிராக கண்டன அறிக்கைகளை விடுக்கின்றனர்.  வடக்கில் உள்ள தமிழ்த் தேசிய உள்ளூராட்சி சபைகளும் அவருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் நிறைவேற்ற உள்ளதாக தெரிவித் துள்ளன.

பிரித்தானிய இரஜ்ஜியத்தில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தமது சுகபோக வாழ்க்கைக்கும் தமது அரசியல் இலாபத்துக்கும் இங்கு தமது இருப்பிடத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் செயல்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team