
முன்னாள் ஓட்டமாவடி தவிசாளர் ஹமீட் எஸ்.ஐ.யின் தாயார் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அன்வர் மாஸ்டரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டாரா.?
வீடியோ
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை மீராவோடை கிழக்கு வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒட்டக சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் அன்வர் ஆசிரியரின் ஆதரவாளர்கள் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளரும், தற்போதைய பிரதி அமைச்சர் அமீர் அலியின் குழுவில் யானை சின்னத்தில் குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் கே.பி.எஸ் ஹமீட் எனப்படும் ஹமீட் எஸ்.ஐயின் தாயாரை தாக்கியதாக வாழைச்சேனை பொலீசில் முரைப்பாடு செய்யாப்பட்டு பிரதேசத்தில் முக்கிய அரசியல் பேசும் பொருளாக மாறியுள்ள விடயம் சம்பந்தமாகவே இந்த காணொளியும், செய்தியும் எமது இணைய வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகின்றது.
எது உண்மை, பொய் எது.? என்பது ஒரு புறமிருக்க…! எதற்கான வயதான ஹமீட்டின் தாயார் தாக்கப்பட்டார்.? இது ஒரு அரசியல் நாடகமா.? நல்லாட்சியில் இவ்வாறு நடக்கலாமா.? அல்லது உண்மையில் அடாவடித்தனமான அரசியலினை அன்வர் ஆசிரியர் கையில் எடுத்துள்ளாரா.? எல்லா வற்றிற்கும் மேலாக அரசியல் அனுபவமிக்க ஹமீட் எஸ்.ஐ. அரசியலை கலையாக நினைத்து அரசியல் நாடயகத்தினை அரங்கேற்றுகின்றாரா.? இதற்கு மீராவோடை கிழக்கு வட்டார மக்கள் தெரிவிக்கும் கருத்து என்ன.? கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களும் பொலீஸ் கஸ்டடியில் இருப்பவரும் உண்மையில் குற்றவாலிகளா.? வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹமீட் எஸ்.ஐ யின் தாயாருடைய வைத்திய அறிக்கை சம்பந்தமாக வைத்திய நிபுணர்களின் பக்க சார்பற்ற அறிக்கை எதனை தெளிவுபடுத்துகின்றது.?
இவ்வாறு பல கேள்விகள் இருக்கத்தக்க நிலையில்.! நடந்து என்ன என்பது பற்றி குற்றம் சட்டப்பட்டுள்ள முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் அன்வர் ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட இடத்தில் நின்ற பெண்மனி மர்ழியா ஆகியோரின் கருத்துக்கள் மீராவோடை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை வாக்களர்களுக்கு தெளிவுபடுத்துவது கடமை என்ற ரீதியில் இங்கே காணொளியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஹமீட் எஸ்.ஐ யுடன் தொடர்பு கொண்டு வினவிய பொழுது நாளை இது சம்பந்தமாக தனது கருத்துத்தினை காணொளியாக வழங்கவுள்ளதாக தெரிவித்தார். மக்களுடைய நிதானமான முடிவே சிறந்த தலைமைத்துவத்தினை சமூகத்திற்கு வழங்கும்… ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.