முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீண்டும் அரசியலில்? - Sri Lanka Muslim

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீண்டும் அரசியலில்?

Contributors

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் அரசியல் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய நல்லொழுக்கம் நிறைந்த அரசியல் கலாசாரம் மற்றும் கொள்கைகளை மீண்டும் சமூகமயப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட அரசியல் செயற்திட்டம் ஒன்றை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் கட்சியின் அரசியல் கொள்கைகளை மீண்டும் சமூகமயப்படுத்த முன் வரவேண்டும் என அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் முதல் வாரத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் மாநாடு ஒன்றில் சிறப்புரையாளராக கலந்து கொள்ளும் சந்திரிகா, இதன் பின்னர் வெளிநாட்டில் இருந்து வரும் தனது பிள்ளைகளுடன் விடுமுறையை கழித்த பிறகு, ஜனவரி மாதம் முதல் அரசியலுக்கு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.m.net)

Web Design by Srilanka Muslims Web Team