முரளிக்கு எதிராக கண்டன தீர்மானம் - Sri Lanka Muslim
Contributors

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன தீர்மானமொன்று சாவகச்சேரி நகர சபையில் நேற்று புதன்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர சபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, முரளிதரனுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தினை நகர சபை உறுப்பினர் பா.ஸ்ரீதரன் சமர்ப்பித்தார்.

அதனை நகர சபை உறுப்பினர் ஞா.கிNஷhர் வழிமொழிய சபையின் முழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. இதன்போது உரையாற்றிய நகரசபை உறுப்பினர் பா.ஸ்ரீதரன்,

“நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட விளையாடிக் கொண்டிருந்த முரளிதரனுக்கு வடக்கில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களும் இளைஞர் யுவதிகள் காணாமல் போனதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அத்துடன், காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டத்தினையும் தமிழ் மக்களின் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக முரளிதரன் கருத்துதெரிவித்துள்ளார். இதனால் தமிழ் மக்கள் மன வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

முரளிதரனால் வடக்கு, கிழக்கில் நடத்தப்படும் கிரிக்கெட் பயிற்சி முகாம்களை நடத்தவிடாமல் தமிழ் மக்களால் போராட்டம் மேற்கொள்ளப்படும்” என்றார்.tm

Web Design by Srilanka Muslims Web Team