முறைப்பாடுகளுக்கு விசேட Call Centre - கல்முனை மாநகர சபையின் புதிய முயற்சி! - Sri Lanka Muslim

முறைப்பாடுகளுக்கு விசேட Call Centre – கல்முனை மாநகர சபையின் புதிய முயற்சி!

Contributors

கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்காக அழைப்பு நிலையம் (Call Centre) எனும் விசேட கருமபீடம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.கல்முனை மாநகர சபையின் பழைய கட்டடத் தொகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்நிலையத்தில், பொது மக்கள் தமது முறைப்பாடுகளை அலுவலக நேரத்தில் 0672030000 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது நேரடியாக வருகைதந்து, வாய்மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தெரிவிக்க முடியும் என நேற்று முன்தினம் (04) மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்,  தெரிவித்தார்.

திண்மக்கழிவகற்றல் சேவை, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் வடிகான் பராமரிப்பு உட்பட மாநகர சபையால் முன்னெடுக்கப்படுகின்ற எந்தவொரு சேவை தொடர்பிலும் பொதுமக்கள் இவ்வாறு முறைப்பாடளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று, எரிபொருள் தட்டுப்பாடு உட்பட நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் சிரமமின்றி இலகுவாகவும் விரைவாகவும் தமது முறைப்பாடுகளை முன்வைத்து, உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கரும பீடத்தை, கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி, ஒத்துழைப்பு வழங்குமாறும் மேயர் கேட்டுக்கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team