முஷாரப்பின் தலைக்கு ரூ.200 கோடி ரூபாவும், 200 ஏக்கர் நிலமும் பரிசு - Sri Lanka Muslim

முஷாரப்பின் தலைக்கு ரூ.200 கோடி ரூபாவும், 200 ஏக்கர் நிலமும் பரிசு

Contributors

பாகிஸ்தானில் முஷரப் அதிபராக இருந்தபோது 2006–ம் ஆண்டு அங்குள்ள பலுசிஸ்தான் பிராந்தியத்தின் பழங்குடி தலைவரான அக்பர்கான்புக்தி ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை அதிபர் முஷரப் தான் ராணுவத்தை ஏவி கொன்றதாக புகார் கூறப்பட்டது.

இதனால் அக்பர்கான் புக்தியின் 4–வது மகன் தலால் அக்பர்புக்தி முஷரப்பை கொன்று அவரது தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. 100 கோடியும், 100 ஏக்கர் நிலமும் தருவதாக கடந்த 2010–ம் ஆண்டு அறிவித்தார்.

இப்போது அவர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முஷரப் தலைக்கு ரூ. 200 கோடி பரிசும், ரூ. 200 ஏக்கர் விவசாய நிலமும் தருவதாக அறிவித்துள்ளார்

 

Web Design by Srilanka Muslims Web Team