முஸ்லிம்களின் காலைக் கழுவவும் நான் தயார் – அமைச்சர் குணரத்ன வீரகோன்! - Sri Lanka Muslim

முஸ்லிம்களின் காலைக் கழுவவும் நான் தயார் – அமைச்சர் குணரத்ன வீரகோன்!

Contributors

(Riswan Khalid)

நம்நாட்டின் சில புத்த பௌத்த பிக்குமார்களின் செயலால், மீண்டும் நம்நாட்டு எதிர்காலம் இருண்டதாக மாற இடமுண்டு, சிங்கள முஸ்லிம் தமிழர்களுக்கிடையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த இவர்களுக்குத் தேவை உள்ளதென மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார்.
அல்பிடிய – கரந்தெனிய பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் இக்கருத்தை வெளியிட்டிருந்தார்.
சில பிக்குமார் இனங்களுக்கிடையில் துவேசத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.எனக்குக் கிடைக்கும் வாக்குகள் பூஜ்ஜியத்துக்கு இறங்கினாலும் நான் இதனை மறுக்கமாட்டேன். மேற்குலக நாடுகள் கொடுக்கின்ற டொலர்களை எதிர்பார்த்துள்ள இந்த பிக்குமார்களின் செயல்கள் அருவருக்கத் தக்கவையாகும்.
நான் முஸ்லிகளின் கால்களைக் கழுவக் கூட தயங்க மாட்டேன். இது பல இனங்கள் ஒன்றாக் வாழும் நாடு. பொதுநலவாய மகாநாடு நடைபெறும் இத்தருணத்தில் இவர்களை செயலால் நம் நாட்டுக்குக் கேட்ட பெயர்தான் கிடைக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team