முஸ்லிம்கள் தொடர்பில் கூட்டமைப்பின் இரட்டை வேடம் - Sri Lanka Muslim

முஸ்லிம்கள் தொடர்பில் கூட்டமைப்பின் இரட்டை வேடம்

Contributors

-ஜுனைட் நளீமி-

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவரை நியமிப்பது தொடர்பில் உண்மைக்குப் புரம்பான இன உறவுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் கருனாகரன்( ஜனா) கருத்து வெளியிட்டுள்ளது கவலையளிக்கின்றது.

2012ம் ஆண்டின் சனத்தொகை புள்ளிவிபர அடிப்படையில் 37.12% கிழக்கில் பெரும்பானமையாக வாழும் முஸ்லிம்கள் சார்பில் ஒருவர் மாகாணத்தில் இருக்கும் ஒரு திணைக்களத்திற்கு உயரதிகாரியாக பதவி வகிப்பதை இனச்சாயல் கொண்டு நோக்கும் இத்தகைய அரசியல் வங்குரோத்து நிலை முஸ்லிம்கள் மீதான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம்கள்  தொடர்பான இரட்டை முகத்தை வெளிச்சமிடுவதாக அமைகின்றது.

அன்மைக்கால இலங்கை சிறுபான்மை மீதான அரசியல் நெருக்குவாரங்களின் விளைவாக தமிழ் முஸ்லிம் உறவு மீள்வாசிப்புச் செய்யப்படவேண்டும் என்ற கருத்து எழுந்துள்ள நிலையில், வெருமனே அரசியல் இலாபங்களை கருத்திற்கொண்டு அரசியல் இலாபங்களுக்காக இன உறவு குறித்து பேசுவது சந்தர்ப்பவாத செயற்பாடாக அமைந்துவிடுகின்றது. திறமை சாலிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி விவகாரத்தில் தமிழ் சமூகம் போராட்ட சூழலை நோக்கி தள்ளப்பட்ட போது அதனை சரிகண்ட முஸ்லிம் சமூகம் திறமை அடிப்படையில தமது உறிமைகளை வென்று கொள்வதில் இன்று தமிழ் குருந்தேசியவாதம் பேசித்திரியும் இத்தகைய பினாமி அரசியல் சக்திக களின்; முட்டுக்கட்டைகளை சந்திக்க முனைவது வேதணையளிக்கின்றது.

ஜனா அவர்கள் மட்டக்களப்பை பிரப்பிடமாக கொண்ட முன்னாள் ஆயுதக் குழுவைச் சார்ந்தவர் என்ற ரீதியில் நோக்கும் போது மாவட்ட மட்டத்தில் முஸ்லிம்கள் மீதான அதிகாரப்பயங்கரவாதம் குறித்து பேசியாகவேண்டும். கடந்தகாலங்களில் மாவட்டத்தில் இரன்டாம் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம்களுக்கென்று இதுவரை ஒரு மேலதிக அரசாங்க அதிபர் நியமிப்பதில் எத்தகைய விட்டுக்கொடுப்புக்களை உங்களது அரசியல், அதிகார வர்க்கம் விட்டுக்கொடுப்புக்களைச்செய்துள்ளது என்ற கேள்விக்கு தமிழ் சமூகம் சார்ந்த உங்களைப்போன்ற அரசியல் பிரதிநிதிகள் முகத்தை கவிழ்க்கவேண்டிய கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அத்தகைய முட்டுக்கட்டைகளையும் தாண்டி பதவி வகித்த மர்ஹூம் வை. அஹமட் அவர்களை மிளேச்சத்தனமாக கொன்று குவித்த இரத்தக்கறை படிந்த உங்கள் கரங்களை எங்கு போய் கழுவுவது என்ற கேள்வி முஸ்லிம் சமூகத்தில் எழத்தான் செய்கின்றது.

வளப்பங்கீட்டில் பாரபட்சம்:

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களது நியாயமான காணி தொடர்பான பிரச்சிணைகளுக்கு இதுவரை எந்த ஒரு தமிழ் அரசியல் தலைமையும் நியாயபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என்பதனை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். உதாரணமாக புல்மோட்டை முஸ்லிம்களது காணி உரிமை தொடர்பான பிரச்சிணையில் பெரும்பான்மையினரோடு கைகோர்த்து நில ஆக்கிரமிப்புக்கு வித்திட்டுவிட்டு இறுதியில் தங்களது பாரம்பரிய பூமிகளுக்கு அச்சுருத்தல் வந்த போது முதலைக்கண்ணீர் விட்டதையும், தீகவாபி முஸ்லிம் காணி தொடர்பில் மௌனித்திருந்ததையும் எவ்வாறு நீங்கள் நியாயப்படுத்த முடியும்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் 2854 சதுர கிலோ மீற்றர் காணியில் முஸ்லிம்களுக்கு விகிதாசார அடிப்படையில் 106 சதுர கிலோ மீற்றர் காணி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெருமனே எழுத்தில் மட்டும் இத்தொகை குறிப்பிடப்பட்டுள்ளதுடன் நடைமுறையில் வெருமனே காத்தான்குடி 6 சதுர கிலோமீற்றர் ஏராவூர்  3 சதுர கிலோமீற்றர்;, ஓட்டமாவடி 17 சதுர கிலோமிற்றர் வாழைச்சேனை 3 சதுர கிலோ மீற்றர் அடங்களாக மொத்தம் 29 சதுர கிலோமீற்றர்களுக்குள்ளாக  முடக்கப்பட்டு மூச்சுத்திணரும் அவலங்களை எவ்வாறு மறுக்க முடியும்.

கிராம சேவையாளர் பிரிவின் எண்ணிக்கை அடிப்படையில் அரசின் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம் பிரதேசங்களில் சனத்தொகை அடிப்படையில் நியாயமாக கிடைக்கவேண்டிய கிராம சேவகர் பிரிவகள் உருவாக்கப்படாமை குறித்து நீங்கள் என்ன குறிப்பிட விளைகின்றிர்கள். 300 தொடக்கம் 400குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு அமைய வேண்டும் என்ற நடைமுறைகளுக்கு மாற்றமாக சிலபோது 1500க்கும் மேற்பட்ட குடும்பங்களைக்கொண்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு வகுக்கப்பட்டு நிர்வாக சுமைகளை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.

உதாரணமாக 24510 மக்கள் சனத்தொகை கொண்ட கோரளைப்பற்று மத்தி முஸ்லிம் பிரதேச செயலகப்பிரிவுக்கு 9 கிராம சேவகர் பிரிவுகள் வழங்கப்பட்டுள்ள அதே வேளை ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட 19659 மக்கள் சனத்தொகை கொண்ட கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்கு 18 கிராம சேவையாளர் பிரிவுகளை வழங்கியுள்ளமியும், 49403 மக்கள் சனத்தொகை கொண்ட காத்தான்குடி பிரதேச சபை பிரிவிற்கு 18 கிராம சேவகர் பிரிவுகளும், 24068 மக்கள் சனத்தொகை கொண்ட மன்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்கு 24 கிராம சேவகர் பிரிவுகளும், 33842 மக்கள் தொகை கொண்ட மன்முனை பற்று பிரிவுக்கு 27 கிராம சேவகர் பிரிவுகளும் வழங்கப்பட்டுள்ளமை எத்தகைய நிர்வாக ரீதியான அநீதியிழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதற்கான சில உதாரணங்களாகும்.

கல்வி ரீதியான புறக்கனிப்புக்கள்:

மட்டக்களப்பு மாவட்டத்தில் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப கல்விக்கான வளப்பகிர்வுகளும் மெற்கொள்ளப்படவில்லை என்பதனையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். மாவட்டத்தில் கானப்படும் ஐந்து கல்வி வலயங்களிலும் 374 பாடசாலைகள் கானப்படுகின்றன. இதில் 70 பாடசாலைகளே முஸ்லிம் பிரதேசங்களில் அமையப்பெற்றுள்ளமை குறிப்ப்டத்தக்கது. இது 20மூமாக கானப்படுகின்றது. எனவே மேலதிகமாக சேரவேண்டிய 6.92மூ கிடைக்கப் பெறாமையே உள்ளது. அவ்வாரே மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் 6317 ஆசிரியர;கள் கடமை புறிகின்ற போதும் முஸ்லிம் பாடசாலைகளில் 1437 ஆசிரியர;களே கடமை புரிகின்றனர்;. இது 22மூ வளப்பகிர்வே ஆகும். இவ்வாறு கல்வி ரீதியான பல்வேறு புறக்கனிப்புக்களை எடுத்துக்காட்ட முடியும்.

அபிவிருத்திப்பணிகளில் புறக்கனிப்பு:

மாவட்டத்தின் அபிவிருத்திப்பணிகளுக்காக செலவிடப்படும் தொகையில் முஸ்லிம் பிரதேசங்களுக்கு விகிதாசார ரீதியில் பகிர்வு செய்யப்படாமை பெரும் குறைபாடாகவே உள்ளது. 2012ம் ஆண்டின் திவிநெகும திட்டத்திற்காக அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 15680000 நிதியில் முஸ்லிம் பிரதேச பிரிவுகளுக்கு ரூபா 2207077 மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 15%மேயாகும். அதே போன்று கமனெகும திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 345000000 தொகையில் முஸ்லிம் பிரதேச பிரிவுகளுக்கு ரூபா 48209227 மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 13% மேயாகும்(பார்க்க- மாவட்ட செயலக 2012ம் ஆண்டின் நிதி அறிக்கை).

மீள்குடியேற்றப் பிரச்சினைகள்:

மாவட்டத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் முஸ்லிம் பிரதேசங்கள் கடுமையாக புறக்கனிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இதுவரை பல முஸ்லிம் கிராமங்கள் மீள்குடியேற்ற கிராமங்கள் பட்டியலில் இடம்பெறாமை கவலைக்குறியது. மாவட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட முஸ்லிம்கிராமங்கள் பயங்கரவாத நடவடிக்கையினால் முற்றாக சேதமடைந்து அக்கிராம மக்கள் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டபோதும் இதுவரை அவர்களது பிரச்சிணைகள் மூடி மறைக்கப்பட்ட ஒன்றாகவே கானப்படுகின்றது. மாராக தாமாகவே அம்மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி செல்கின்ற போது பல்வேறு திடாமிட்ட தடைகள் போடப்படுகின்றன. உதாரனமாக மன்முனை என்ற பிரதேசம் இன்று வரைபடத்தில் கூட பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உன்னிச்சை, உருகாமம், கல்லிச்சை, காரமுனை என அடுக்கி கொண்டு செல்ல முடியும்.

இத்தகைய பல்வேறு திட்டமிட்ட கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இன்றும்  முஸ்லிம் சமூகம் தமிழ் சமூகம் மீது நம்பிக்கை கொண்டே செயற்பட்டு வருகின்றது. இவற்றை தூக்கிப்பிடித்துக்கொண்டு வீதிக்கு வீதி, ஆர்ப்பாட்டங்களையும், இனமுறுகளை விதைக்கும் அறிக்கைகளையும் ஒரு போதும் நாகரீகமற்ற முறையில் மேற்கொள்ளவில்லை. தமது உரிமைகளை வென்றெடுக்க தமிழ் சமூகத்திற்கெதிராக போராடவுமில்லை. ஆனால் இவ்வுண்மைகளுக்கு மாற்றமாக தமிழ் அரசிய தலைமைகளும் குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் செயற்படுவது மிகுந்த மனவேதணை அழிக்கின்றது. யுத்தத்தினால் தங்களைப்போன்றே தமிழ் சமூகமும் பாதிப்படைந்துள்ளனர்; என்பதனை முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொண்டதின் விளைவே இத்தகைய அமைதிப்போக்கிட்கான காரனமாகும். சகோதர இனத்துடன் ஒற்றுமையாக பகிர்ந்துண்டு வாழவே முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.

ஜனா அவர்களோ அல்லது தமிழ் அரசியல் தலைமைகளோ தமது வங்குரோத்து அரசியலைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டி பொய்யான இட்டுக்கட்டப்பட்ட விடயங்களை அப்பாவி தமிழ் சமூகத்தின் இதயங்களி விதைக்க நினைப்பது வரலாற்றுத்துரோகமாகும். இத்தகையவர்கள் இனரீதியான கண்ணாடியூடாகவே நோட்டமிட்டு எதனைத்தான் தமது சமூகத்திற்கு சரிவரச்சொல்லியிருக்கின்றனர். உன்னிச்சை வாவியினை மையமாகக்கொண்டு நீவழங்கள் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படும் போது உன்னிச்சையில் வாழுகின்ற தமிழ் சகோதரர்கள் குடிநீருக்காய் பல கிலோமீற்றர்கள் நடந்து அவதியுரும் நிலை குறித்து எதனை சாதித்துள்ளீர்கள். வாகனேரி தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர்களும் மாணவர்களும் பல கிலோமீற்றர்கள் நடவளியில் வனாந்தரங்களைக்கடந்து சென்று கல்வி கற்கும் சிரமங்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளனரா அல்லது ஒருவேளை கூட உன்ன உணவின்றி வாடும் படுவான்கரை மக்களுக்கு தமது நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதர திட்டங்களை முன்மொழிந்துள்ளனரா என்றாள் எதுவுமே இல்லை.

அரசியலைப்பயன்படுத்திக்கொண்டு சொத்து சேர்ப்பதிலும் வெளிநாட்டுப் பணங்களில் பினாமி வாழ்க்கை வாழ்வதையும் விட்டும் தமது பார்வைகளைத்திருப்பி அப்பாவி மக்களுக்காக வாழவேண்டிய தேவை இருக்கின்றது. கடந்த கால வடுக்கலை மறந்து சமூகங்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு தடையாக ஒருபோதும் நீங்கள் குறுக்காக நிற்க வேண்டாம் என தயவாய் கேட்டுக்கொள்கின்றேன்

எதனையும் இதய சுத்தியுடனும், நியாயபூர்வமாகவும் அனுக வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது என்பதனை விளங்கி கொள்ள வேண்டும். சிப்பிமடுவில் வாழ்ந்த சிக்கள சகோதர இனமாக இருந்தால் என்ன, இருநூருவில்லில் வாழ்ந்த மூச்லிம் சமூகமாக இருந்தால் என்ன, மைலந்தனையில் வாழ்ந்த தமிழ் சமூகமாக இருந்தால் என்ன அனைவரும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் மனித நேயத்துடன் அவர்கள் குறித்து குரல் எழுப்ப வேண்டிய தேவை உங்களுக்கும் உள்ளது. வெருமனே அரசியல் விளம்பரங்களுக்காவோ, கதிரைகளை தக்க வைத்துக்கொள்வதற்காகவோ வக்கிர எண்ணங்களை சஆஉக மட்டத்தில் விதைக்க நினைப்பது குரங்கு அப்பம் திரித்த கதையாக மாறிவிடும் என்பதனை விளங்கி கொள்ள வேண்டும்.

எதனயும் இனரீதியாக நோக்க முற்பட்டாள் நீங்கள் முஸ்லிம் பெரும்பானமை கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் ஒருவரே அரச அதிபராகவும், அம்பாரையில் முஸ்லிம் அரச அதிபரும் நியமிக்க வேண்டும் என குரல்  எழுப்ப வேண்டி ஏற்படும். அதனை விட்டு விட்டு யதார்த்த பூர்வமகாக சிந்தித்து சமூகங்களுக்கிடையில் அன்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முனைவீர்கள் என முஸ்லிம் சமூகம் உங்களிடம் எதிர்பார்க்கின்றது. இங்கு சில தரவுகளை நான் சுட்டிக்காடியதன் நோக்கம் எவரதும் மனங்களைப் புண்படுத்துவதோ அல்லது இன முருகளுக்கு எண்ணெய் வார்ப்பதோ அல்ல. மாறாக உண்மை நிலைகளைப்புரிந்து விட்டுக்கொடுப்புடன் வாழ எம்மை பண்படுத்திக்கொள்வதற்கேயாகும்.

Web Design by Srilanka Muslims Web Team