முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்ற முயற்சிகளின் வெற்றிக்காகத் தன்பதவியையும் அதன் வழி அதிகாரங்களையும் உரிய முறையில் பயன்படுத்தி வருகின்றார் - கலாபூஷணம் எஸ்.எம். சஹாப்தீன் - Sri Lanka Muslim

முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்ற முயற்சிகளின் வெற்றிக்காகத் தன்பதவியையும் அதன் வழி அதிகாரங்களையும் உரிய முறையில் பயன்படுத்தி வருகின்றார் – கலாபூஷணம் எஸ்.எம். சஹாப்தீன்

Contributors

-கலாபூஷணம் எஸ்.எம். சஹாப்தீன்-

சமகாலத்தில் உலகெங்கும் வாழும் 1.7 பில்லியன் முஸ்லிம்களிடையே பல்வேறு துறைகளிலும் அதிகம் செல்வாக்கை செலுத்தி வரும் ஆளுமைமிக்க முஸ்லிம் தலைவர்களில், முதல் ஐநூறு பேர் தெரிவு செய்யப்பட்டோர் வரிசையில், நம் நாட்டைச் சேர்ந்த கைத்தொழில் வணிகத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவருமான அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது முழு நாட்டுக்கும் பெருமை தரும் ஒரு விடயமே.

ஜோர்தானை தலைமையகமாகக் கொண்டியங்கும் ரோயல் இஸ்லாமிய கற்கை மையத்திற்கான ஆராய்ச்சி நிலையம், 2013/2014 ஆண்டுகளுக்கான செல்வாக்குள்ள உலக நாடுகளில் வாழும் முஸ்லிம் தலைவர்களை ஆய்வுக்குட்படுத்தியது. அதில் ஆளுமைமிக்க முதல் 500 பேரை வரிசைப்படுத்தி தெரிவு செய்தது. பிரஸ்தாப ஆய்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஆளுமைமிக்க உலக முஸ்லிம் தலைவர்களில் ஒருவராகவே, அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தெரிவு செய்யப் பட்ட ஐந்நூறு பேரையும் சாதாரண மனிதர்களாக, சராசரி தலைவர்களாக குறை மதிப்பீடு செய்து விட முடியாது, இத் தெரிவில் அடங்கும் உலகளாவிய முஸ்லிம் தலைவர்கள் அனைவருமே சமகாலத்தில் புகழ்பூத்து திகழ்பவர்கள்.

சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அkஸ் அல் சவுத், துபாய் நாட்டின் முடிக்குரிய இளவரசர் ஜெனரல் ஷேக் முஹம்மத் பின் ஷெய்க் அல் நஹ்யான், ஈரான் நாட்டின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா ஹாஜ் ஷெய்ஹ் அல் கொமெயினி, துருக்கிய நாட்டின் பிரதமர் ரீஸப் தையிப் ஏர்டன்க், பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப், உலக இஸ்லாமிய சமயப் பிரசாரகர் டாக்டர் ஷாகிர் நாயக் போன்ற செல்வாக்கு மிக்கவர்களின் வரிசையில்தான், நம் நாட்டு அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் இடம்பெறுகிறார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் “செயற்கரிய” சேவைகளுக்கு எவ்வளவோ உதாரணங்களை முன்வைக்க முடியும். அச்சேவைகளின் பதிவு களும், தரவுகளும், புள்ளி விபரங்களும், அதற்கான வியாக்கியானங்களும் ஆவணங்களாக காப்பகங்களில் பாதுகாக்கப்பட்டே வருகின்றன. அச்சேவைகளின் முக்கியமானவற்றை – மேற் படி தெரிவுக்கான ஆய்வில் சீர்தூக்கிப் பார்க் கப்பட்ட பதச்சோறாகப் பரிசீலனை செய்யப்பட்ட அச்சத்தை பார்க்கலாம்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீள் குடியேற்ற, அனர்த்த நிவாரண வேலைகள் அமைச்சராக அரும்பணியாற்றிய வேளையில், குறிப்பாக 2008, 2009 ஆண்டுகளில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து சென்ற அனாதரவான மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை பராமரித்து குறுகிய காலப்பகுதியில் அன்னவர்களின் சொந்த கிராமங்களில் அவர்களை மீளக் குடிய மர்த்தியதையும் நிர்க்கதிக்கு ஆளான அத்தகைய வர்களுக்கான அடிப்படை வசதிகளை பரிபூர ணமாக செய்து கொடுத்ததையும் சர்வதேசம் பாராட்டி மகிழ்வதை, மேற்படி ஆராய்ச்சி நிலையம் கவனத்தில் கொண்டு கண்ணியம் செய்துள்ளது.

அது மட்டுமல்ல தற்போது தான் வகிக்கும் கைத் தொழில், வணிகத்துறை அமைச்சராகப் பணி யாற்றிவரும் நிலையில், தாய்நாட்டின் பொரு ளாதார மேம்பாட்டுக்காக உழைத்து வரு வதையும், வர்த்தக உலகில் இலங்கையின் சர்வதேச வர்த்தக உறவிற்கான, அதன் வள ர்ச்சிக்கான புதிய அடித்தளத்தை செப் பனிட்டு, சீர் செய்து வருவதையும் மனம் திறந்து பாராட்டலாம்.

இந்த தலைவர் ரிஷாத் பதியுதீன் வெளி ச்சுவரை மட்டும் பூசிவிட்டு உட்சுவரை பூசவும் என்றும் மறந்தாரில்லை. தன் இனச் சகோதரர்கள் கடந்த 23 வருடங்களாக நாடெங்கும் சிதறி அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து வருவதை யும் எண்ணிப் பார்த்து அவர்களின் மீள் குடியேற்ற வாழ்வுக்காகவும் அயராது உழைத்து வருகின்றார்.

முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்ற முயற்சிகளின் வெற்றிக்காகத் தன்பதவியையும் அதன் வழி அதிகாரங்களையும் உரிய முறையில் பயன்படுத்தி வருகின்றார். இந்தத் தெரிவு எப்படி ஏற்பட்டது? அதற்கான தகுதி நம் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் அப்படி என்ன தான் இருக்கிறது? இந்தத் தெரிவு ஏற்றுக் கொள்ளத்தக்கதா? போன்ற வினாக்களுக்கு விடை காண்பது இவ்வேளை பொருத்தமான காரியமாகவே கொள்ளப்படும்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் மிகவும் வயது குறைந்த துடிதுடிப்பான செயல்திறன்மிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன், சுமார் 23 வருடங்களுக்கு முன் வடபுலத்திலிருந்து சிலமணி நேர அவகாசத்தில் துரத்தப்பட்ட முஸ்லிம் அகதிகளில் ஒருவர் பாதிக்கப்பட்டதினால் மக்களுக்கு, சாதி, இன, மொழி, பிரதேச வேறுபாடின்றி, அவர்களின் துயர் துடைத்து அவர்களை கரைசேர்த்து, கைதூக்கி விட்டார். தன் இளவயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, அதில் வெற்றி பெற்று பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்நீச்சல் போட்டு, அரசியல் சதுரங்கத்தில் ஏற்படும் சவால்களை எல்லாம் சமாளித்து வெற்றிவாகை சூடினார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.

 

Web Design by Srilanka Muslims Web Team