
முஸ்லிம் உலகுக்கு பெருமை சேர்க்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு!
ஏகாதிபத்தியவாதிகளாலும் அரபு ஆட்சியாளர்களாலும் தூண்டப்பட்ட சதாம் ஹுசைனின் ஈரான் மீதான எட்டு ஆண்டுகால அழிவு யுத்தம் 1980 செப்டம்பர் 22 ஆம் திகதி ஆரம்பமானது. இப்படையெடுப்பை நினைவுகூரும் வகையில். ஈரான் இஸ்லாமிய குடியரசு மோதலின் கசப்பான மற்றும் கெளரவமான நினைவுகளை ஈரானிய சமுதாயத்திற்கு நினைவூட்ட ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் 22ஆம் திகதியில் இருந்து புனித பாதுகாப்பு வாரத்தை அனுஷ்டிக்கிறது. பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை அடைய வேண்டும் என்ற வைராக்கியத்தை ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு இந்த யுத்தம் வழங்கியது எனலாம்.
ஏவுகணை, ரேடார், கடல்சார் பாதுகாப்பு, லேஸர் கருவிகள், கவச வாகனங்கள் மற்றும் ட்ரோன் தொடர்பான மேம்பட்ட அமைப்புகள் மற்றும் உபகரணங்களை வடிவமைத்து தயாரிப்பதில் ஈரானின் சாதனைகள் அதன் தற்காப்பு சக்தியை சிறந்ததாக ஆக்கியுள்ளன.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இராணுவ விமானப்படைத் தளபதியின் கூற்றுப்படி, ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAV) உற்பத்தி செய்யும் துறையில் ஈரான் 100% தன்னிறைவை அடைந்துள்ளது.
‘Kaman-12’ மற்றும் ‘Kaman-22’ என பெயரிடப்பட்ட இரண்டு அதிநவீன ட்ரோன்களை தயாரிப்பதில் ஈரானிய விமானப்படை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று பிரிகேடியர் ஜெனரல் ஹமிட் வாஹிதி கூறுகின்றார்.
மேம்பட்ட UAV களை உற்பத்தி செய்யும் துறையில் ஈரான் சிறந்த பலம்வாய்ந்த நாடுகளில் ஒன்றாக இருப்பதாகவும், இந்த திறன் வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரானிய ஆயுதப் படைகளின் பிரதம தளபதியான ஆயதுல்லா செய்யதலி காமனெய், ‘தேசம், நாடு மற்றும் எதிர்காலத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க, தற்காப்புத் திறனுக்கு மேலதிகமாக தாக்குதல் திறனையும் அதிகரிக்க வேண்டும்’ என்று கூறினார்.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹுசைன் சலாமி ஏப்ரல் 19, 2022 அன்று, ஈரானிய இராணுவம் மற்றும் ஐ.ஆர்.ஜி.சி ஆகிய இரண்டிலும் ஆளில்லா விமானங்களைத் தயாரிக்கும் துறையில் சாதனைகள் மிகச் சிறந்தவை என்று கூறினார்.
தளபதி, பிறிதொரு வைபவத்தில் உரையாற்றுகையில், இன்று, அமெரிக்கா தனது எந்த திட்டத்தையும் (எம்மை மீறி) பிராந்தியத்தில் செயல்படுத்த முடியாது, அதன் திட்டங்கள் தோல்வியில் முடிவடைகின்றன. ஈரான் பாதுகாப்புக்காக ஏனையோரில் தங்கியிருந்த சகாப்தம் முடிந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
பல தொழில்நுட்பங்களில் நாங்கள் முதல் இடத்தில் இருக்கிறோம், வான் பாதுகாப்புத் துறையில் கூட, சில வல்லரசுகள் நமது ஆயுதங்களை வாங்கும் நிலையில் உள்ளன. மற்றும் கூட்டு ஒத்துழைப்பை அவை நாடும் அளவுக்கு உலகின் தலைசிறந்த சக்திகளை நாம் விஞ்சிவிட்டோம், என்று அவர் குறிப்பிட்டார்.
ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது ஹுசைன் பாகரி,
நாட்டின் அதிநவீன பாதுகாப்பு வலையமைப்பினால் ஈரானிய வான்பரப்பை பாதுகாக்க முடிந்துள்ளது மற்றும் சர்வதேச அரங்கில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் தடுப்பு சக்தியானது எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பதிலளிக்க முழுமையாக தயாராக உள்ளது என்றார்.
தேசிய வான் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஜெனரல் பாகரி விடுத்த செய்தியில், ‘நாட்டின் ஆயுதப் படைகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வலையமைப்பின் தீர்க்கமான மற்றும் மூலோபாயப் பங்கில் இருந்து பயனடைந்ததுடன், வான் பாதுகாப்புப் படையினால் ஈரானிய வான்வெளியின் பாதுகாப்பை முழுமையான விழிப்புணர்வுடன் பாதுகாக்க முடிந்தது என்றார்.
ஈரானிய இராணுவத்தின் தரைப்படையானது மத்திய ஈரானில் இரண்டு நாள் எக்ததார் (வலிமை) 1401 பயிற்சிகளை அண்’மையில் தொடங்கியது, நாட்டின் மத்திய பகுதியில் துரித எதிர்வினைப் படைகள் மற்றும் ஹெலிகொப்டர்களின் குழுக்கள் இணைந்து ஒரே இரவில் ஹெலிபோர்ன் நடவடிக்கைகளைக் கொண்டிருந்தன.
ஈரானிய இராணுவ தரைப்படையானது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு மூலோபாய ஏவுகணையை (SSM) சோதித்தது, இது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது. ஃபத்ஹ் (வெற்றி) 360 என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை, எக்ததார் 1401 பயிற்சியின் இரண்டாம் கட்டத்தில் ஏவப்பட்டது.
ஈரானிய இராணுவப் பிரிவுகளும் உள்நாட்டு தயாரிப்பான ஃபஜ்ர்-5 ஏவுகணைகளை ஏவியது. இந்த ஏவுகணை 75 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது என்றும், 90 கிலோகிராம் எடையுள்ள வெடிமருந்துகளுடன் 175-கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லக்கூடியது என்றும் கூறப்படுகிறது.
ஃபத்ஹ் 360 ஏவுகணை மணிக்கு 3,704 கிலோமீட்டர் வேகத்தில் சென்று மூலோபாய இலக்குகளைத் தாக்கும் வல்லமைக்கு கொண்டது, மேலும் அதன் வேகத்தை மணிக்கு 5,000 கிமீ ஆக அதிகரிக்க முடியும், அதே நேரத்தில் செயற்கைக்கோள்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, விரைவான வழிசெலுத்தல் மற்றும் எதிரி இலக்குகளுக்கு எதிராக வேகமாகத் தாக்கக்கூடிய வல்லமை கொண்டதாகும்.
ஈரான் இஸ்லாமிய குடியரசு இராணுவம் நாடு முழுவதும் பெரிய அளவிலான ட்ரோன் பயிற்சிகளைத் தொடங்கியது, 150 க்கும் மேற்பட்ட புதிய மேம்பட்ட ட்ரோன்கள் இதன்போது பயன்படுத்தப்பட்டன.
முஹாஜிர்-6 ISTAR விமானங்களுக்கு கூடுதலாக உள்நாட்டு தயாரிப்புகளான யாசிர், சாதிக், யஸ்டான், மற்றும் அபாபீல்-3 தந்திரோபாய கண்காணிப்பு ஆளில்லா வான்வழி வாகனங்கள், பெலிகன் செங்குத்து டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் கடற்படை ட்ரோன்கள், வெவ்வேறு தளங்களிலிருந்து பறந்து ஈரான் முழுவதும் நாட்டின் எல்லைகளை கண்காணிப்பதில் ஈடுபட்டன.
இந்தியப் பெருங்கடல் கடற்படை சிம்போசியம், பொதுவாக IONS (IMEX 2022) என்று அழைக்கப்படுகிறது, இந்திய கோவா துறைமுகத்தில் ஈரான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியப் பெருங்கடல் நாடுகள் சில இதில் பங்கேற்றன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஈரானிய DENA அழிப்பான் இந்த பயிற்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
ஈரானிய, ரஷ்ய மற்றும் சீன கடற்படைகள் இணைந்து தங்களது மூன்றாவது இராணுவ பயிற்சியை இந்தியப் பெருங்கடலில் அண்மையில் நடத்தியது.
சமீபத்தில், ஈரானின் இராணுவ விமான பாதுகாப்பு படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலிரெஸா சபாஹிஃபார்ட், உள்நாட்டு தயாயாரிப்பான 300 கி.மீ. சென்று தாக்கக்கூடிய Bavar-373 விமான பாதுகாப்பு அமைப்பின் இறுதி சோதனை அடுத்த சில நாட்களில் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.
Bavar 373 வான் பாதுகாப்பு விமானம் தயாரிப்பதற்கான அனைத்து உபகரணங்களும் நிபுணத்துவமும் நாட்டினுள் பூர்வீகமாக இருக்கின்றன, என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மேலும், ஈரானின் இஸ்லாமிய புரட்சியின் (ஐ.ஆர்.ஜி.சி) கடற்படை தளபதி ரியர் அட்மிரல் அலிரெஸா தங்சிறி (Alireza Tangsiri), ஐ.ஆர்.ஜி.சி கடற்படை படைகள் ஆண்டு இறுதி வரை பல்வேறு காலங்களில் பல்வேறு இராணுவ சாதனைகளை வெளியிடும் என்று கூறினார்.