முஸ்லிம் கவுன்ஸிலின் பொருளாளர் பாரி பவுஸ் காலமானார்! - Sri Lanka Muslim

முஸ்லிம் கவுன்ஸிலின் பொருளாளர் பாரி பவுஸ் காலமானார்!

Contributors

முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸிலின் பொருளாளரும், சமூக சேவையாளருமான பாரி பவுஸ் (வயது 70) ஞாயிறன்று  காலமானார்.

இவரது மறைவு குறித்து, முஸ்லிம் கவுன்ஸில்  தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஸ்பீட் பிளம்பர் நிறுவனத்தின் உரிமையாளரான இவர், ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம் கவுன்ஸிலின் பொருளாளராகப் பணிபுரிந்து வந்தார். முஸ்லிம் கவுன்ஸிலின் பணிகளுக்காக கொழும்பு ஐந்தில் உள்ள இவரது வீட்டையே வழங்கியிருந்தார். முஸ்லிம் கவுன்ஸிலின் வளர்ச்சியில் இவரும் இவரது துணைவி ஹாஜியானி சாதிகாவும் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

இவரது மறைவு, தன்னலம் பாராது நாட்டுக்கும், சமூகத்துக்கும் தொண்டாற்றிய சிறந்த மகனை இல்லாமல் செய்துள்ளது.

இவரது மறுமைக்காகப் பிரார்த்திப்பதோடு, இவரது பிரிவினால் வாடும் மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team