முஸ்லிம் காங்கிரசினால் ஆயிஷா பாலிகா புறக்கணிகப்படுகின்றது - அதிபர் பரீட் (video) » Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரசினால் ஆயிஷா பாலிகா புறக்கணிகப்படுகின்றது – அதிபர் பரீட் (video)

pr66

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ  – அதிபர் பரீட் உடனான முக்கிய நேர்காணல்:- 


வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் இருந்து ஆயிஷா பெண்கள் பாடசாலையினை பிரதி அமைச்சர் அமீர் அலியுடன் சேர்ந்து பிரித்தெடுப்பதற்கு தானும் அமீர் அலிக்கு விசுவாசமாக இருந்துள்ளேன் என நினைத்தே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆயிஷா பாலிஹாவிற்கு தேவையாக உள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்டுகொள்வதில்லை என முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதி உயர்பீட உறுப்பினரும் ,இரண்டு முறைகள் கல்குடா பிரதேசத்தில் பாராளுமன்ற வேட்பாளராக களமிறங்கியவரும், கல்குடா தொகுதி முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளரும், தற்போதைய வாழைச்சேனை ஆயிஷா பாலிகாவின் அதிபருமான எம்.ரீ.எம்.பரீட் தெரிவிக்கின்றார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தான் எங்கும் பிரதி அமைச்சர் அமீர் அலியினை ஆதரித்து கூட்டங்களில் உரையாற்றியதோ அல்லது அவருக்காக கூட்டங்களை நடாத்தியதோ கிடையாது. அதனால் தனக்கு அரசியல் ரீதியான எந்தவொரு முன்னெடுப்புக்களிலும் தான் ஈடுபடவில்லை என பிரதி அமைச்சர் அமீர் அலி நினைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் எது எப்படியிருந்தாலும் அரசியல் பணிகளில் இருந்து தான் ஒதுங்கியிருக்கின்றேன். ஆககே இதனை கருத்தில் கொண்டு எமது பாடசாலைக்கு தேவையான அபிவிருத்தி பணிகளை எல்லோரும் கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று ஏற்படுத்தி தர வேண்டும் என தனது கருத்தினை தெரிவித்தார்.

மேற்கூறிய கருத்துக்களை முஸ்லிம் காங்கிரசின் கோடையாக கருதப்படுகின்ற வாழைச்சேனை பிரதேசத்திற்கு முஸ்லிம் காங்கிரசினால் குறிப்பிட்டு கூறும் அளவிற்கு எந்த அபிவிருத்தி பணிகளும் முன்னெடுகப்படவில்லை என கூறுகின்ற இந்த நிலையில் வாழைச்சேனை பிரதேசத்து மக்கள் அதிகளவிலான வாக்குகளை கடந்த மாகாண சபை தேர்தலின் பொழுது தற்போதைய மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நசீர் அஹமட்டிற்கு வழங்கியிருக்கின்ற நிலையிலும் முதலமைச்சரின் ஆதிக்கம் வாழைச்சேனை பிரதேசத்தில் அதிகளவில் காணப்படுகின்ற நிலையிலும் நீங்கள் அதிபாராக உள்ள அயிஷா பெண்கள் பாடசாலையின் அபிவிருத்தி பணிகளில் ஏன் முதலமைச்சர் கவனம் செலுத்துவதில்லை என்ற கேள்விக்கே அதிபர் பரீட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் எம்.ரி.எம்.பரீட் அதிபரிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளான
01- வாழைச்சேனை பிரதேசத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வெற்றிக்காக முக்கிய பங்காற்றியுள்ள நீங்கள் இரண்டு முறைகள் பாராளுமன்ற வேட்பாளராகவும் இருந்து கட்சியின் அதி உயர் பீட உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளீர்கள். தற்பொழுது அரசியலில் நீங்கள் அமைதி காத்து வருகின்றமைக்கான உண்மைக் காரணம் என்ன?

02- அந்நூர் தேசிய பாடசாலையில் இருந்து ஆயிஷா பெண்கள் பாடசாலை பிரிந்து சென்றமையான விடயத்தில் நீங்கள் ஆயிஷா பாடசாலைக்கு அதிபராக வந்தமை உங்களின் அரசியல் வளர்சிக்கு போடப்பட்ட கால் கட்டாக பிரதேசத்தில் பேசப்படுவது சம்பந்தமாக உங்களின் கருத்தென்ன?

03- உண்மையாகவே வாழைச்சேனை பிரதேசத்திற்கு தனியான பெண்கள் பாடசலையின் தேவை கடந்த 2009ம் ஆண்டு இருந்ததா? அல்லது இன்னும் காலம் தாழ்த்தி சில வருடங்களுக்கு பிற்பாடு சகல வசதிகளுடனும் இரண்டு பாடசாலைகளும் இருக்கதக்கவாறு பிரித்திருக்கலாம் என நினைக்கின்றீர்களா?
04- நீங்கள் தற்பொழுது அதிபராக உள்ள ஆயிஷா பெண்கள் பாடசாலைக்கு தேவையாக உள்ள குறைகளை எவ்வாறு எதிர்காலத்தில் தீர்த்து வைக்க முடியும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

05- இரண்டு முறைகள் கல்குடா பிரதேசதிற்கு பாராளுமன்ற பிரதி நிதித்துவம் கிடைப்பதற்கு நீங்கள் பாராளுமன்ற வேட்பாளராக களமிறங்கியதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதானது வாழைச்சேனை பிரதேசத்தில் அரசியல் தலைமைத்துவத்தின் குறைபாட்டினை காட்டுகின்றதா? அல்லது நீங்கள் தலைமைத்துவத்தினை உருவாக்கி விட்டுத்தான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கின்றீர்களா?

06- உங்களுடைய அரசியல் வரலாற்றில் முக்கிய பிரச்சனையாகவும் விடயமாகவும் பார்க்கபடுகின்ற 2001ம் ஆண்டு கல்குடாவின் பிரதி நிதித்துவதிற்கு சவாலாக ஐக்கிய தேசியக் கட்சியில் களமிறக்கப்பட்ட யூ.அஹமட்டிற்கு எதிராக நீங்கள் களமிறக்கப்பட்டு அன்று கல்குடாவின் பிரதி நிதித்துவம் பாது காக்கப்பட்டது சம்பந்தமாக விரிவாக கூற முடியுமா?

07- வாழைச்சேனை பிரதேசத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ள தனியான பிரதேச சபையானது அரசியல்வாதிகளினால் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றமையினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

08- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடனும், தலைமையுடனும் நீண்ட உறவினையும், முக்கிய பதவிகளிலும் இருந்த உங்களால் ஏன் வாழைச்சேனை மக்களின் உரிமை குரலாக ஒலிக்கின்ற விடயமாக உள்ள தனியான பிரதேச சபையினை பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது?

09- அரசியல் காலங்களில் வாழைச்சேனை பிரதேச மக்களை வழி நடத்துபவர்கள் எவர்கள்.? என்பது சம்பந்தமாக உங்களின் கருத்தென்ன?

10- கல்குடா பிரதேசத்தில் தலை விரித்தாடுகின்ற பிரதேச வாதம் சம்பந்தமாக உங்களின் கருத்து எதுவாக இருக்கின்றது.? அதற்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என நீங்கள் நினைகின்றீர்கள்?

11- 2008ம் ஆண்டு முதற் தடவையாக கிழக்கு மாகாணம் மாகாண சபை தேர்தலுக்கு முகம் கொடுத்த வேளையில் நீங்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஓரங்கட்டப்பட்டமைக்கான காரணம் என்ன?

12- குறித்த மாகாண சபை தேர்தலில் எல்.ரி.எம்.புர்கான் அதிகளவான வாக்குகளை பெற்றிருந்தும் இஸ்மாயில் ஹாஜிக்கு மாகாண சபை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டமை அன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எடுத்த சரியான முடிவு என நீங்கள் நினைகின்றீர்களா?

13- வாழைச்சேனை பிரதேசமானது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக இருப்பது ஒரு புறமிருக்க வாழைச்சேனை பிரதேசமானது தேர்தல் காலங்களில் விலைபோகின்றது என பரவலான பேச்சு பிரதேசத்தில் இருக்கின்றது. இது சம்பந்தமான உங்களின் கருத்து என்ன?

14- கடைசியாக வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபையானது கல்குடா அரசியல் தலைமையான அமீர் அலியினால்தான் முடியும் அல்லது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினால்தான் முடியும் என்பதில் நீங்கள் எந்த பக்கத்தில் இருக்கின்றீர்கள்?

போன்ற முக்கிய கேள்விகளுடன் இன்னும் சில கேள்விகளுக்குமுன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதி உயர்பீட உறுப்பினரும் ,இரண்டு முறைகள் கல்குடா பிரதேசத்தில் பாராளுமன்ற வேட்பாளராக களமிறங்கியவரும், கல்குடா தொகுதி முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளரும், தற்போதைய வாழைச்சேனை ஆயிஷா பாலிஹாவின் அதிபருமான எம்.ரீ.எம்.பரீட் தெரித்த விரிவான, சமகால அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியதும், மக்களின் சிந்தனைக்கு தேவையான கருத்துக்கள் அடங்கிய காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

pr.jpg2

Web Design by The Design Lanka