முஸ்லிம் காங்கிரசின் வேட்புமனு பல இடங்களில் நிராகரிக்கப்பட்டமை திட்டமிடப்பட்ட செயல் - ஜுனைட் நளீமி - Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரசின் வேட்புமனு பல இடங்களில் நிராகரிக்கப்பட்டமை திட்டமிடப்பட்ட செயல் – ஜுனைட் நளீமி

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ ஜுனைட் நளீமியின் கருத்து

இம்முறை நடக்கவிருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஸ்ரீ லங்கா முச்லிம் காங்கிரசினுடைய வேட்புமனுவானது தேசியத்திலே பல இடங்களில் நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர், காத்தான்குடி, கல்குடா பிரதேசங்களில் தேர்தல் ஆணையகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளமை கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாமல் தேசியத்திலே ஓர் பேசும் பொருளாக பார்க்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் என்னை பொறுத்த மட்டில் குறித்த விடயத்தினை பார்க்கின்ற பொழுது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட செயலாக நான் கருதுகின்றேன் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினறும், கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற முக்கிய,மான சமூக சிந்தனையாளருமான அல்-ஹாஜ் ஜுனைட் நளீமி தெரிவிக்கின்றார்.

மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த ஜுனைட் நளீமி… மாவட்ட அடிப்படையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினை பொறுத்தமட்டில் தனித்துவமாக நின்று வெற்றி பெற முடியாத சில பிரதேச சபைகள் இருப்பது உண்மையான விடயமாகும். எனவே அதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக இவ்வாறாக சுயற்சையாக நின்று தமது ஆதிக்கத்தினை நிலை நட்ட வேண்டும் அல்லது சபைகளை கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான திட்டங்களை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது என நான் கருதுகின்றேன்.

உதாரணமாக ஏறாவூரில் மெளலான அணியினர் மற்றும் ஹாபிஸ் நசீர் அணி என இரண்டு அணிகள் களத்தில் குதித்துள்ளமையினை பார்க்கின்ற பொழுது ஆரம்பத்தில் தனியாக முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கி இருக்குமாயின் ஆறு ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்பொழுது மெளலானா அணியும் ஹாபிஸ் அணியும் சேர்ர்ந்து ஒன்பது ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சில வேலைகளில் இதில் மாற்றங்கள் ஏற்பட்டலாம். இருந்தும் இவ்வாறு அரசியல் சதுரங்க விளையாட்டில் செயற்படுவதானது திட்டமிடப்பட்ட வியூகமாகவே நான் பார்க்கின்றேன்.

ஆனால் ஓட்டமாவடி பிரதேசத்தினை பார்க்கின்ற பொழுது முஸ்லிம் காங்கிரசானது சுயேற்சையாக களமிறங்குவது என்பதும் வட்டாரம் என்ற புதிய தேர்தல் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளமையும், கைக்கு அடக்கமானவர்கள் கைக்கு அடக்கமான பகுதிக்குள் தங்களது தேர்தல் முன்னெடுப்புக்களில் ஈடுபடுவதன் காரணமாகவும் உண்மையில் இரண்டு அல்லது மூன்று கட்சிகளுக்கிடையிலான கட்சிகளுக்கிடையிலான போராட்டமாகத்தான் பார்க்கின்றேன் என தெரிவித்தார் ஜுனை நளீமி.

அத்தோடு பல அரசியல் கட்சிகள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் கோட்டையான ஓட்டமாவடிக்குள் களமிறக்கப்பட்டுள்லமையானது எவ்வையான அரசியல் தாக்கத்தினை அல்லது மாற்றத்தினை இப்பிரதேச சபை தேர்தலில் கொண்டுவரும் என்பதனை மையமாக வைத்து தொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு ஜுனைட் நலீமியினால் வளங்கப்பட்ட விரிவான பதில்கள் எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team