முஸ்லிம் கூட்டமைப்பு சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாக மாறிவிட கூடாது- அதாவுல்லாஹ்வின் விசேட நேர்காணல் (video) » Sri Lanka Muslim

முஸ்லிம் கூட்டமைப்பு சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாக மாறிவிட கூடாது- அதாவுல்லாஹ்வின் விசேட நேர்காணல் (video)

ath66

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ – முன்னாள் அமைச்சர் அதாவுல்லவின் முக்கியமான கருத்துக்கள்:– 

எங்களை பொறுத்தவரையில் பதவிகளுக்கு நாங்கள் ஆசைப்படவில்லை. ஆனால் தலைவர் அஸ்ரஃப் எடுதுக்கொண்ட இந்த பணியினை மீண்டும் பல முயற்சிகளை செய்து சமூகத்தின் மத்தியில் விடிவுகளை ஏற்படுத்தின்ற கட்டத்தில் சரியான உண்மைக்கு உண்மையான முறையில் உழைக்கின்ற போராளிகள், இஹ்லாசானவர்கள் இணைகின்ற பொழுது அதற்கு நாங்கள் எப்பொழுதும் துணையாக இருப்போம். மாறாக பதவிகளை அடைந்து கொள்வதற்காகவும், வேறு பின்னணிகளிலே எவராவது வருவதன் மூலம் மீண்டும் முஸ்லிம் சமூகம் சட்டிக்குள் இருந்து அடுப்பிற்குள் போக முடியாது.

ஏற்கனவே ஒன்றை விரட்டுவதற்கோ அல்லது அதிலிருந்து அகற்றிவிடுவதற்கோ நாங்கள் அனுபவித்து வருக்கின்ற தொல்லைகள் ஒரு புறமிருக்க மீண்டும் நாங்கள் எல்லோருமாக சேர்ந்து வேறொரு அடிப்படையிலே கூட்டணி ஒன்றினை உருவாக்கி அதுவும் சமூகத்திற்கு பிழையானதாக அமைந்து விடக் கூடாது என்பதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம்..

ஏன் இன்றால் இன்றைக்கு இலங்கையினை பிரதி நிதித்துவப் படுத்துகின்ற பெரிய கட்சிகளும், வெளிநாடுகளினுடைய பெரும் சதிகாரர்களும் ஒன்று சேர்ந்து எமது உள்ளூர் அரசியல் தலைமைகளை பொம்மைகளாக வைத்திருக்கின்ற வரலாறுகளும், நாங்கள் ஏற்கனவே கூறிய விடயங்களும் தற்பொழுது அம்பலமாகி கொண்டிருகின்றன. என்ற கருத்தினை முஸ்லிம் காங்கிரசிற்கு எதிராகவுள்ள அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஒரு கூட்டமைப்பின் கீழ் முஸ்லிம் சமூகத்தின் விடிவிற்காய் செயற்பட இருப்பது சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கே முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் இஸ்தாபக தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்.. நான் எதற்காக இந்த விடயத்தினை கூறுகின்றேன் என்றால்?! இன்று பிரதமர் ரணில் விக்ரசிங்கவோடுதான் எல்லோரும் இணைந்திருகின்ரார்கள். ஆகவே ரணில் விக்ரமசிங்கவோடு ஒருவர் இருக்கதக்க அதற்கு எதிரான சக்தியும் இயல்பாகவே ரணில் விகரமசிங்கவோடு தொடர்புபட்ட வகையில் வருகின்ற பொழுது இரண்டுமே பொய்யாகின்ற நிலைமையே உருவாகலாம். ஆகவேதன் இவற்றுக்கெல்லாம் அப்பால் உண்மைக்கு உண்மையாக உழைக்கின்ற தலைவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட தயாராகின்ற பொழுது அதற்கு நாங்கள் தோல் கொடுக்க தயாராக இருக்கின்றோம்.

உண்மையில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு என்பது முஸ்லிம் சமூதயத்திற்கு நண்மை பயக்கூடியதா என்பதை மட்டுமே நான் சிந்துக்கொண்டிருக்கின்றேன். ஏன் என்றால் நாங்கள் முஸ்லிம் காங்கிரசினை அமைத்ததற்கான முக்கிய காரணங்களை நாங்கள் நன்றாக புரிந்து கொண்ட போராளிகளாக இருப்பதே ஆகும். எனவேதான் அந்த போராட்டத்தினையும், விடுதலையினையும் பெரும் தலைவரின் மரணத்திற்கு பிற்பாடு பெற்றுக்கொள்ள முடியாமல் போனமையினால்தான் முஸ்லிம் காங்கிரசிற்குள் இருந்து நாங்கள் போராடி அதில் வெற்றியடைதாத நாங்கள் தேசிய காங்கிரஸ் எனும் கட்சியினை உருவாக்கி தலைவர் மர்ஹூம் அஸ்ரஃப் விட்ட இடத்தில் இருந்து அந்த பணியினை தொடர்ந்து சென்று சமூகத்திற்காகக சில விடிவுகளை நாங்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றோம்.

உதாரணமாக இன்றைக்கு வடகிழக்கு இணைப்பதாக இருந்தால் கிழக்கு மாகாணம் சம்பந்தமாக முஸ்லிம் மக்களோடும் பேச வேண்டும் என்ற நிலைப்பட்டிற்கு தமிழர்களை மேசைக்கு கொண்டுவந்துள்ளோம். கொடூரமானதவும், மனிதாபிமானமற்றதாகவும் இருந்த வரலாற்று பயங்கரவாதத்தினை கிழக்கு மகாணத்திலிருந்து மாத்திரமல்ல முழு நாட்டிலிருந்தும் இல்லாமல் செய்வதற்கான எங்களுடைய நியாயமான அரசியலினை மேற் கொண்டு அதில் வெற்றி கண்டிருக்கின்றோம். எனவே நாங்கள் நாளைக்கு மரணித்தாலும் அதைப்பற்ரிய கவலை எங்களுக்கு கிடையாது.

ஏன் என்றால் நாங்கள் கையில் எடுத்த பணியினை சமூகத்திற்கு சரியாக செய்திருக்கின்றோம் என்ற திருப்தி எங்களுக்கு இருக்கின்றது. எனவே அவற்றை எல்லாம் செய்து கொண்டு வந்த எங்களுக்கு இன்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் பிழை என தெரிந்து கொண்டிருக்கின்ற இந்த சூழ் நிலையில் இன்னுமொரு கூட்டமைப்பினை உருவாக்குகின்ற விடயம் முஸ்லிம் சமூகத்திற்கு நண்மை பயக்க கூடிய விடயமாக இருந்தால் மாத்திரமே நாங்கள் அதனை பற்றி சிந்திக்க முடியும்.

வெறுமனே ஆட்சி அதிகரங்களை மாற்றுவதும், ரவூப் ஹக்கீமிடம் இருக்கும் அதிகாரத்தினை இன்னுமொருவர் அடைந்து கொள்வதற்காகவும், அல்லது பாராளுமன்றம், மகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களை அடைந்து கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தொழிற்படுவதினால் அந்த தொழிற்பாட்டினை ஒத்ததான இன்னொரு இயந்திரத்தினை உருவாக்குவது என்ற விடயத்திற்கு அப்பால் உண்மைக்கு உண்மையாக முஸ்லிம் சமூகத்தினை பற்றி சிந்தித்து அதற்காகன விடிவுகளை பெறக்கூடிய வகையில் உண்மையானவர்கள் இஹ்லாசோடு வருவார்களானால் நாங்கள் எப்படியான விட்டுக்கொடுப்புக்களையும் செய்து நாங்கள் செயற்பட தயாராக இருக்கின்றோம் என ஆணித்தராகவும் தூர நோக்கு சிந்தனையுடன் தெரிவித்தார் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லால்
அத்தோடு தொடர்ந்து முன்னாள் அமைச்சரிடம் மிக முக்கியமான கேட்கப்பட்ட கேள்விகளான௪.

01-முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு எதிராக பல ஆதாரங்களையும், தகவல்களை வெளியிடப்போவதாக கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பகிரங்கமாக ரவூப் ஹக்கீம் மீது குற்றம் சுமர்த்தி வருகின்ற நிலையில் நீங்கள் குறித்த விடயம் சம்பந்தமாக அமைதி காத்து வருகின்றமைக்கான காரணம் என்ன?

02-அன்று உங்களை கட்சியிலிருந்து வெளியேற்றி பொழுது உங்களுக்கு எதிராக செயற்பட்டு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹக்கீமுடைய கரங்களை பலப்படுத்திய செயலாளர் ஹசன் அலி மற்றும் பசீர் சேகுதாவூத் போன்றவர்களுக்கு 13 வருடங்களுக்கு பிற்பாடு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள்?

03-முக்கியமாக முஸ்லிம் காங்கிரசில் அதிருப்தி அடைந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அரசியல் தலைமைகளாக இருக்கின்றவர்கள் எல்லாம் முஸ்லிம் காங்கிரசிற்கு எதிராக கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி அரசியலினை முன்னெடுக்க உள்ளதாக பேசப்படும் விடயம் சம்பந்தமாக உங்களின் கருத்தென்ன?

04-முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கிமினால் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் சுயமாக எடுக்கப்பட்டவைக்கு அப்பால் அவர் மீது தனிப்பட்ட சுயலாபகங்களுக்காக தினிக்கப்பட்டமை என்றும், பசீர் சேகுதாவூத் இயக்குனராகவு ரவூப் ஹக்கீம் இயங்குனராகவுமே செயற்பட்டுவந்துள்ளார். இன்று பசீரினுடைய வெளியேற்றத்திற்கு பிற்பாடு முஸ்லிம் காங்கிரஸ் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கைகள் விடப்படுகின்றன. அதற்கு அமைவாக நீங்கள் மீண்டும் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு உங்களுக்கு முக்கிய பதவியோ அல்லது கிழக்கின் முதலமைச்சராக்குவதற்கான முஸ்லிம்தீபுகள் முஸ்லிம் காங்கிரஸ் பக்கத்திலிருந்து இடம் பெறுவாதக தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

05-கடந்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் தோற்கடிக்கப்பட்டிருந்தீர்களா? அல்லது உங்களுக்கான மக்கள் செல்வாக்கு குறைந்திருந்தா?

06-அப்படி என்றால் பொதுபல சேனா போன்ற அமைப்பானது ஐக்கிய தேசிய கட்சியின் பின்னணியில் இருந்து கொண்டே செயற்படுவதாக நீங்கள் கூற வருக்கின்றீர்களா?

07-அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்றினை உங்களுடைய அரசியல் கோட்டையாக வைத்திருக்கின்ற நிலையில் உங்களுடைய தேசிய காங்கிரசானது மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் செல்வாக்கு பெறாமைக்கான காரணம் என்ன?

08-உங்களால் அரசியல் முகவரி கொடுக்கப்பட்ட முஸ்லிம் கங்கிரசினுடைய மாகாண சபை உறுப்பினர் தவத்தினுடைய வெளிப்பாடே உங்களுடைய பாராளுமன்ற தோல்விக்கு அல்லது உங்களின் வாக்கு வங்கி கடந்த தேர்தலில் குறைவதற்கு முக்கிய காரணம் என பேசப்படுவதில் ஏதும் உண்மை இருக்கின்றதா?

09-எதிர் நோக்க இருக்கின்ற மற்றும் மகாண சபை, உள்ளூராட்சி மற்றும் பாராளும்னற தேர்தல்களில் எவ்வகையான தேர்தல் யுத்திகளை கையாள இருக்கின்றீர்கள்?

10-அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் அரசியலில் முக்கிய பேசும் பொருளாக காணப்படுக்கின்ற தனியான அலகு அல்லது கரையோர மாவட்ட கோரிக்கையானது ஏனைய மாவட்டங்களில் வாழுக்கின்ற முஸ்லிம்களினுடைய முக்கிய அரசியல் அபிலாசையாகவும் இருக்கின்றது என நீங்கள் நினைக்கின்றீர்கள? குறித்த விடயத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன?

11-கிழக்கினை தனியாக பிரிப்பதற்கு கடந்த அரசாங்கத்தோடு முக்கிய முக்கிய பாங்காற்றியவர் என்ற வகையில் தற்பொழுது வடக்கும் கிழக்கும் இணைப்படுவது சம்பந்தமாக எடுக்கப்பட்டு வருக்கின்ற அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள்?

12-அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் தலை விரித்தாடுகின்ற பிரதேசவாதத்தினை அரசியல் ரீதியாக இல்லாதொழிக்க முடியாதா? அல்லது அரசியல் செய்வதற்கு பிரதேசவாதம் முக்கிய ஆயுதமாக பயண்படுத்தப்படுகின்றதா?

13- கடந்த மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவர்களில் முக்கியமான இரண்டு ஊர்களின் அரசியல் தலைமைகளான நீங்களும், ஹிஸ்புல்லாவும் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றீர்கள். அந்த வகையிலே ஹிஸ்புல்லாவிற்கு தேசியப்பட்டியலும், இராஜாங்க அமைச்சும் இந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அதே நிலையில் அம்பாறை மாவட்டத்தில் அதிக வாக்குகளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்கு பெற்றுக்கொடுத்தும் உங்களுக்கு ஏன் இன்னும் தேசியப்[பட்டியல் ஆசனம் வழங்கப்படவில்லை? வழங்கப்பட கூடிய சாத்திய கூறுகள் இருக்கின்றத?

14- நீங்கள் சிறீலங்கா முஸ்லிம் கங்கிரசின் தலைமையினை அரசியல் ரீதியாகவும், சமூகத்தின் விடிவிற்காகவும் விமர்சித்து வருகின்ற நிலையில் அண்மையில் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக தவிசாளர் பசீர் சேகுதாவூத் சீடீக்கள் மற்றும் பல அந்தரங்க விசயங்களை ஆதரங்களாக வெளியிடப்பபோவதாக கூறிய விடயத்தினை அரசியல் ரீதியாக நீங்கள் சரியென பார்க்கின்றீர்களா?

15- ரவூப் ஹக்கீமினை தற்பொழுது விமர்சிக்கின்ற நீங்கள் பெரும் தலைவரின் மரணத்திற்கு பிற்பாடு தலைமைத்துவதிற்கான பிரச்சனைகள் எழுந்த பொழுது ரவூப் ஹக்கீமின் கரங்களை நீங்களும் சேர்ந்து எதற்காக பலப்படுத்தினீர்கள்

16- முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் எதிர் நோக்கி வருகின்ற சமகால பிரச்சனைகள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்திற்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

17- கிழக்கின் எழுச்சியிலும் அதனை சார்ந்த நிகழ்வுகளிலும் நீங்கள் முக்கிய பேச்சாளராக இருந்து செயற்பட்டு நீங்கள் நினைத்தவற்றினை சாதித்து விட்டீர்களா? அல்லது இன்னும் மக்களை எழுச்சிக்கு உட்படுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றதா?

18- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையானது பல வகைகளிலே விமர்சனத்திற்கும் எதிர்ப்பிற்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் ரவூப் ஹக்கீமிற்கு அடுத்ததாக எவர் கட்சியின் தலைமை பதவிக்கு தகுதியானவர் என நினைக்கின்றிர்கள்?

போன்ற முக்கிய பதினெட்டு கேள்விகளுக்கு தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் வழங்கிய விரிவான பதில்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka