முஸ்லிம் பிரதேசங்களில் நடமாடுவோர் குறித்து அவதானம் தேவை! - Sri Lanka Muslim

முஸ்லிம் பிரதேசங்களில் நடமாடுவோர் குறித்து அவதானம் தேவை!

Contributors

(MSM.பாயிஸ்) 

வீடுகளுக்கு பொருட்களை விற்பனை செய்ய அல்லது அறிமுகம் செய்ய வரும் விற்பனைப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முஸ்லிம் பிரதேசங்களிலேயே இவர்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
வோஷிங் பவுடர், கேக் பவுடர், சவர்க்காரம், உடுதுணிகள் என பல்வேறுபட்ட பொருட்களை வீடு வீடாக கொண்டு வந்து அறிமுகம் செய்யும் நபர்கள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
ஆண்கள் அதிகம் வீடுகளில் இல்லாத மதிய நேரங்களிலேயே இவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான நடை உடை பாவனையுடன் வீடுகளுக்குள் நுழைகிறார்கள். பெண்களுடன் கவர்ச்சியாக பேசும் இவர்கள் தங்களின் பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்தைவிட தீய நோக்கத்தோடுதான் அதிகம் பேர் வருகிறார்கள்.
காத்தான்குடியில் ஒரு வீட்டுக்கு வந்த ஒரு கேக் பவுடர் விற்பனைப் பிரதிநிதி அந்த வீட்டுத் தலைவியிடம் அந்த கேக் பவுடரை வாங்கும் படி மிகவும் வற்புறுத்தி இருக்கிறார், எங்கள் வீட்டில் என் கணவர் இந்தியாவில் இருந்து கொண்டுவந்த கேக் பவுடர் இருக்கிறது இது தேவை இல்லை என கூறியிருக்கிறார், அதற்கு அந்த நபர் அப்படியானால் இதன் செய் முறையை எனக்கு கூறுங்கள் பார்க்கலாம் என கூறினாராம்.
அப்பெண் கறாராக தேவையில்லை நீங்கள் போகலாம் என்று கூறியவுடன்தான் அவர் அங்கிருந்து நகர்ந்திருக்கிறார். இன்னொரு இடத்தில் சரியான தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுக்க முடியுமா என ஒரு பெண்ணிடம் விற்பனைப் பிரதிநிதி கேட்டிருக்கிறார்,  அப்பெண்மணி தண்ணீரை கொடுத்ததும் அவர் கடும் சூடாக இருக்கிறது குளிர் தண்ணீர் இல்லையா? உங்கள் வீட்டில் குளிர் சாதனப்பெட்டி இல்லையா? என அதிபிரசங்கித் தனமாக கேட்க அந்த வீட்டு அம்மாவுக்கு கோபம் வந்து திட்டி அனுப்பியதாகவும் அறியக் கிடைக்கிறது. இவர்களின் நடவடிக்கை வீடு வீடாக பிச்சை எடுப்பதைவிடவும் கேவலமாக இருக்கிறது.
வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி கடைகள் தாராளமாக இருக்கும் போது இவர்களின் வருகை அவசியமற்றது. ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள இஸ்லாமிய அமைப்புக்கள்,நிறுவனங்கள், பள்ளிவாயல்கள், பிரதேச, நகர சபைகள் இவர்கள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும்!
இறைவன் எம்மையும் எம் குடும்பத்தாரையும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பானாக!
-jfm

Web Design by Srilanka Muslims Web Team