முஸ்லிம் மாணவிகள் முகத்தை மறைத்து உடையணிய மொறட்டுவ பல்கலைக்கழகத்தால் தடைவிதிப்பு - Sri Lanka Muslim

முஸ்லிம் மாணவிகள் முகத்தை மறைத்து உடையணிய மொறட்டுவ பல்கலைக்கழகத்தால் தடைவிதிப்பு

Contributors

முஸ்லிம் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் நிகாப் அணிவதை மொறட்டுவ பல்கலைக்கழகம் தடை செய்துள்ளது.

எனினும் உடலின் ஏனைய பகுதிகளை முழுமையாக மறைப்பதில் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைப்பதனை மட்டும் அனுமதிக்க முடியாது என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஏ.கே.டப்ளியூ. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

முதன் முறையாக இரண்டு முஸ்லிம் மாணவிகள் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை மூடிக்கொள்ள அனுமதி கோரியிருந்தனர்.

எனினும் பாதுகாப்பு விடயங்கள் இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்டது. முகத்தை மூடிக் கொண்டு குற்றவாளிகள் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கக் கூடும் என்பதால் அதற்கு அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் முஸ்லீம் உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், முகத்தை தவிர்ந்த தலை உள்ளிட்ட உடலின் ஏனைய பகுதிகள் மறையும் வகையில் ஆடைகளை அணிய முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் துணை வேந்தர் பேராசிரியர் ஏ.கே.டப்ளியூ. ஜெயவர்தன அறிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team