முஸ்லிம் வியாபாரிகள் திருடிய பிள்ளையார் சிலை - என்ற தலைப்பில் தமிழ் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது - Sri Lanka Muslim

முஸ்லிம் வியாபாரிகள் திருடிய பிள்ளையார் சிலை – என்ற தலைப்பில் தமிழ் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

Contributors

முத்தையன்கட்டு வலதுகரை பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் சிலையைத் திருடிக்கொண்டு தப்பிஓட முற் பட்ட தென்பகுதியினர் வசமாக மாட்டியுள்ளனர். தென் பகுதியைச் சொந்த இடமாகக்கொண்ட முஸ்லிம் வர்த் தகர்கள் சிலர் குறித்த பிள்ளையார் சிலையைத் திருடி க்கொண்டு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர்.

சிலை காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரிடம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதேவேளை அப்பகு தியிலிருந்து இரும்புப் பொருட்களைக் கொள்வனவு செய்து ஏற்றிச் செல்கின்ற முஸ்லிம் வியாபாரிகள் இரும்புகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல முற்பட்ட பொழுது பொலிஸார் அவ்வாகனத்தினைச் சோதனையிட்டுள்ளனர்.

அப்பொழுது குறித்த பிள்ளையார் சிலையினைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் வன்னிப்பகுதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் இடம்பெற்ற களவுகளுக்கும் தென்பகுதியினருக்கும் தொடர்புகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளது என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

என்று  அவ் இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team