மூதூர் : கரையோரக் கிராமங்களில் நீர் உட்புகுந்துள்ளது ! - Sri Lanka Muslim

மூதூர் : கரையோரக் கிராமங்களில் நீர் உட்புகுந்துள்ளது !

Contributors

-மூதூர் முறாசில்-  

இணைப்பு -2: மூதூர்  கொட்டியாரக்குடா கடல் நேற்று சனிக்கிழமை இரவு தீடீரென   கொந்தளித்ததில் ஹபீப் நகர், தக்வா நகர் முதலான கரையோரக் கிராமங்களில்    நீர் உட்புகுந்துள்ளது.

கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் கடல் சீற்றத்தைத் தொடர்ந்து மீன் பிடித் தொழில் பாதிப்படைந்துள்ள நிலையிலேயே மீனவர்களின் உடைமைகளும்  கடல் கொந்தளிப்பினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

 

 இணைப்பு -2:

கொட்டியாரக்குடா கடல் நேற்று இரவு முதல்  தொடர்ந்து கொந்தளித்து வரும் நிலையில் ஹபீப் நகர்,தக்வா நகர் முதலான கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் நண்பர்களது வீடுகளிலும்  பாடசாலைகளிலும் தஞ்சம் புகுந்த வண்ணம் உள்ளனர்.

இதேவேளை, உமர் பாறுக் வித்தியாலயத்தில் தங்கியிருந்த 60 குடும்பங்களைச் சேர்ந்த 200ற்கும் அதிகமானோருக்கு   மூதூர் ; பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹாரீஸ் மற்றும் கிழக்கு மாகாண சகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி ஜே.எம். லாஹிர் ஆகியோர்  தமது சொந்த நிதியிலிருந்து சமைத்த உணவுகளை  வழங்கினர்.(lm)

1423

,,,

4546

Web Design by Srilanka Muslims Web Team