மூதூர் முஸ்லிம்களின் பிரச்சினைகளை செவிமடுக்க யாரும் இல்லையா? (படங்கள் இணைப்பு) - Sri Lanka Muslim

மூதூர் முஸ்லிம்களின் பிரச்சினைகளை செவிமடுக்க யாரும் இல்லையா? (படங்கள் இணைப்பு)

Contributors

 

-மூதூர் அஸ்மி-

தீர்க்கப்படுமா மூதூர் மேற்கு நாவலடி பிரதேச மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள்.

மூதூர் மேற்கு நாவலடி பிரதேச கரையோர முஸ்லிம்களின் தற்காலிக கொட்டில்கள் கடும் கடற் காற்றினால் பாதிப்படைந்துள்ளது. இதனால் அங்கு வசித்த மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் மற்றும் நன்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

அரச சார்பற்ற நிறுவனங்களினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட 8மாத கால எல்லையைக் கொண்ட தற்காலிக கொட்டில்களில் 3 வருடத்துக்கு மேலாக வசித்து வருகின்றனர். இப்போது அக் கொட்டில்கள் தேசமுற்ற நிலையில் காணப்படுவதுடன் இவ் விடயம் தொடர்பாக பல்வோறு அரச அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தும் எவ்வித கவணமும் செலுத்தவில்லை என அப் பிரதேச வாசிகள் கூறிப்பிடுகின்றனர்.

மேலும் 5 மாதத்துக்கு முன்னர் வீசிய சுழல் காற்றினால் 3 தற்காலிக கொட்டில்கள் அடித்து செல்லப்பட்டதாகவும் இதனை சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியும் எதுவித உதவிகளும் கிடைக்க வில்லை எனவும் மலசலகூடம்இ கிணறு என்பனவும் பாதுகாப்பற்ற முறையில் தாங்களே அமைத்து பயன்படுத்தி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

Web Design by Srilanka Muslims Web Team