மூன்றில் இரண்டு பெண் செய்தியாளர்களுக்குப் பாலியல் தொல்லை - ஆய்வு! - Sri Lanka Muslim

மூன்றில் இரண்டு பெண் செய்தியாளர்களுக்குப் பாலியல் தொல்லை – ஆய்வு!

Contributors

(Inne) ஊடகங்களில் பங்காற்றும் பெண்களில் மூன்றில் இரண்டு பேருக்குசக ஆண் ஊழியர்களால் பாலியல் தொல்லைகள் அளிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பெண்கள் ஊடக நிறுவனம் என்ற அமைப்பும், லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் சர்வதேச செய்தி பாதுகாப்பு அமைப்பும் இணைந்து 822 பெண் ஊடக ஊழியர்களிடம் பாலியல் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்தன. கேள்வி கேட்கப்பட்டவர்களில் பெரும்பாலான பெண்கள் ‘தாம் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளதாகவும், ஆனால் இது குறித்து வெளியே தெரிவிக்க வேண்டாம்’ என்று கூறியுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட பெண்களில் 82 சதவீதம் செய்தியாளர்கள் ஆவர் என்றும், மேலும் 49 சதவீதம் பேர் நாளிதழ்களில் பணியாற்றுபவர்கள் என்றும், 24 பேர் வாரஇதழ்களில் பணியாற்றுபவர்கள் என்றும் 21 சதவீதம் பேர் தொலைக்காட்சியிலும், 16 சதவீதம் பேர் வானொலியிலும் பணியாற்றுபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொல்லைக்குட்படுத்தப்படும் பெண்களில் 29 சதவீதம் ஆசிய பசிஃபிக் பகுதியினராவர். ஒட்டுமொத்தத்தில், உலகம் முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team