மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆபத்தானது – ஹக்கீம்! - Sri Lanka Muslim

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆபத்தானது – ஹக்கீம்!

Contributors

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆபத்தானது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் மூலம் அரசியல் சாசனத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற நிர்ப்பந்தம், இந்த நாடு எதிர்நோக்கிய மிக மோசமான நிலைமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிப்பட்ட சிலரின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றங்களைச் செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமை முடக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பயன்படுத்தப்படுவதனை தடுக்க அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட முயற்சிக்கப்பட்ட ஒரு சட்ட மூலத்திற்கு தாம் எதிர்ப்பை வெளியிட்டதாகவும், அதன் பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்வதனை தடுக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களிடம் கடந்த பொதுத் தேர்தலின் போது கேட்டுக் கொண்டதாகவும், அந்தக் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகிக்காமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

-gtn

Web Design by Srilanka Muslims Web Team