மெர்ஸ் வைரஸ் அபுதாபிக்கும் பரவியது - ஒரு பெண் மரணம் - Sri Lanka Muslim

மெர்ஸ் வைரஸ் அபுதாபிக்கும் பரவியது – ஒரு பெண் மரணம்

Contributors

மெர்ஸ் என்ற வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண் இறந்து விட்டதாக அபுதாபி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மெர்ஸ் என்றழைக்கப்படும் மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி ஸிண்ட்ரோம் என்ற வைரஸ் சவுதி அரேபியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு சவுதி அரேபியாவில் ஏறத்தாழ 50 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த வைரஸ் அமீரகத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் நோய் காரணமாக ஒரு பெண் இறந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தப் பெண் ஜோர்டான் நாட்டினைச் சார்ந்தவர் என்றும், அவருடைய கணவரும், மகனும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவி்த்துள்ளது. இவர்கள் இருவரும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 19 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இருவர் கத்தர் நாட்டில் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. nne

Web Design by Srilanka Muslims Web Team