மேலும் பிரதியமைச்சு பதவிகள் ! - Sri Lanka Muslim
Contributors

அரசாங்கம் மூன்று கட்டங்களாக மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பசில் ராஜபக்ச இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், முக்கிய அமைச்சுக்களுக்கு பிரதியமைச்சர்கள் இன்மையினால் அவற்றுக்கு பிரதியமைச்சர்களை நியமிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் நான்கு வகைப்படுத்தல்களின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

குறிப்பாக முன்னர் மாகாண சபைகளில் அமைச்சுப் பதவிகளை வகித்தோர், கடந்த 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கூடிய விருப்பு வாக்குகளை பெற்றோர், இரண்டாவது அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றோர் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் போன்ற அடிப்படையிலேயே வகைப்படுத்தல்கள் அமைந்துள்ளன.

முதல் கட்டமாக ஒரு வகைப்படுத்தலின் கீழ் பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் முன்னர் மாகாண சபைகளில் அமைச்சுப் பதவிகளை வகித்தோர் மற்றும் விருப்பு வாக்குகள் போன்ற விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன.

அடுத்ததாக இரண்டாவது கட்டத்திலும் சில பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன. இந்த இரண்டாவது அல்லது மூன்றாவது கட்ட பிரதியமைச்சுப் பதவி வழங்கும் செயற்பாட்டின் போது நிச்சயமாக சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் பதவிகள் வழங்கப்படும். இது கட்டாயமாக நடைபெறும். குறிப்பாக சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இவ்வாறு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team