மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அறிவிப்பால் நெருக்கடியை சந்திக்கும் வங்கிகள்

Read Time:1 Minute, 15 Second

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது Windows XP இயங்குதளத்திற்கான உத்தரவாதத்தை இந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்திருந்தமை தெரிந்ததே.

இந்நிலையில் உலகெங்கிலும் அதிகளவான கணனிகள் Windows XP இயங்குதளத்தில் இன்னும் இயங்கிக்கொண்டிருப்பதனால் அந்நிறுவனம் இக்கால எல்லையை 2015ம் ஆண்டு வரை நீடித்துள்ளது.

எனினும் தற்போது வெளியான ஒரு அறிக்கையின்படி உலகெங்கிலும் உள்ள வங்கி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் 95 சதவீதமான பண இயந்திரங்களில் Windows XP இயங்குதளமே பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 420,000 இற்கும் மேற்பட்ட இயங்திரங்கள் இவ்வியங்குதளத்தினைக் கொண்டுள்ளன.

இதேவேளை 15 சதவீதமான பண இயந்திரங்களில் தற்போது Windows 7 நிறுவப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Previous post வங்கதேசம் செல்லும் இலங்கை அணி
Next post இலங்கையின் இராஜதந்திரிகளாக அரசியல்வாதிகளின் உறவினர்கள் நியமனம் – ஆங்கில செய்திதாள்