மைத்திரிபால, கோட்டாபய படுகொலை சதி முயற்சி குறித்து ஏன் விசாரணையில்லை..? அருட்தந்தை சிறில் காமினி..! - Sri Lanka Muslim

மைத்திரிபால, கோட்டாபய படுகொலை சதி முயற்சி குறித்து ஏன் விசாரணையில்லை..? அருட்தந்தை சிறில் காமினி..!

Contributors
author image

Editorial Team

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena ) மற்றும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa ) ஆகியோரை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து ஏன் விசாரணை நடாத்தப்படவில்லை என தேசிய கத்தோலிக்க சமூக தொடர்பாடல் நிலையம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையத்தின் பணிப்பாளர்  அருட்தந்தை சிறில் காமினி  (Cyril Gamini) ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்த படுகொலை சதி முயற்சி குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரான் ஹாசீம் குறித்த விசாரணைகளை இந்த அதிகாரி மேற்கொண்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஹ்ரான் கைது செய்யப்படவிருந்த நிலையில் நாமல் குமார என்பவரின் குற்றச்சாட்டின் பேரில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அப்போதைய ஜனாதிபதியான சிறிசேனவும், தற்போதைய ஜனாதிபதியாக கோட்டாபயவும் இந்த கொலை சதி முயற்சி குறித்த விசாரணைகளை முன்னெடுக்காமை ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team