மொத்த செலவினம் ரூ.1,542 பில்லியன்; பாதுகாப்புக்கு ரூ.253 பில்லியன் - Sri Lanka Muslim

மொத்த செலவினம் ரூ.1,542 பில்லியன்; பாதுகாப்புக்கு ரூ.253 பில்லியன்

Contributors

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவினமாக 1,542 பில்லியன் 250 மில்லியன் 518 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் நாடாளுமன்றில் இன்று சமர்பித்தது. அந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திலேயே செலவினம் மதிப்பிடப்பட்டுள்ளது.

பாதுக்காப்பு அமைச்சுக்கான செலவினமாக 253,802,915,000 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 210,674,260,000 மீண்டுவரும் செலவினமாகும். 43,228,650,000 ரூபா மொத்த செலவினமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2014 வரவு செலவு திட்டத்தை நவம்பர் 21 ஆம் திகதியன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.

வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர்;  அடுத்த நாள் முதல் வரவு செலவுத் திட்ட விவாதம் நவம்பர் 29 வரை நடைபெறும்.

2014 வரவு-செலவு திட்டத்தில் சேர்ப்பதற்கென தொழிற்சங்கங்கள், வணிக மற்றும் தொழில்வாண்மை அமைப்புகள்  முன்மொழிவுகளை அனுப்பியுள்ளன.

2014 வரவு செலவு திட்டத்தின் மூலம் துண்டுவிழும் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.5 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக குறைக்க முடியுமென எதிர்பார்ப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அடுத்த நாள் முதல் வரவு செலவுத் திட்ட விவாதம் நவம்பர் 29 வரை நடைபெறும்.

2014 வரவு-செலவு திட்டத்தில் சேர்ப்பதற்கென தொழிற்சங்கங்கள், வணிக மற்றும் தொழில்வாண்மை அமைப்புகள்  முன்மொழிவுகளை அனுப்பியுள்ளன.(tm)

Web Design by Srilanka Muslims Web Team