மொரட்டுவ பல்கலை நிகாப் தடை விவகாரம் - Sri Lanka Muslim
Contributors

 

 –எம்.எப்.எம்.பஸீர்-

 

இலங்கை மொறட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்தின் வளா­கத்­தினுள் புர்கா, நிகாப் போன்ற முஸ்லிம் பெண்­களின் ஆடைக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த தடை­யா­னது பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கத்தின் அங்­கீ­கா­ரத்­து­ட­னேயே அமுல் செய்­யப்­பட்­டுள்­ளது.

 

பாது­காப்பு கார­ணங்­களை பிர­தா­னப்­ப­டுத்தி இந்த தடை அமுல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக மொறட்­டுவை பல்­க­லைக்­க­ழக உப வேந்தர் பேரா­சி­ரியர் ஏ.கே.டப்­ளியூ.ஜய­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

 

பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி பயிலும் இரு முஸ்லிம் மாண­விகள் பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கத்­திடம் கண்­களை மட்டும் தெரியும் படி­யாக முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் ஆடை­யினை அணிந்து கல்வி நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்க அனு­மதி வழங்­கு­மாறு கோரி­யுள்­ளனர்.

இது தொடர்பில் சுமார் ஒரு மாத காலத்­துக்கும் மேலாக பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கத்­தி­னரால் விவா­திக்­கப்­பட்ட நிலையில் அதற்கு அனு­மதி வழங்­கு­வ­தில்லை என்ற தீர்­மா­னத்­துக்கு பல்­கலை நிர்­வாகம் வந்­துள்­ளது.

 

நிகாப் உடையில், அதா­வது முகத்தை மறைக்கும் வித­மாக பல்­க­லை­யினுள் வேறு யாரேனும் உள் நுழையக் கூடும் என்ற அச்­சத்­தி­லேயே பாது­காப்பு கார­ணங்­களை முதன்­மைப்­ப­டுத்தி இத்­தடை அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

 

மொறட்­டுவை பல்­க­லையில் உப வேந்தர் இது தொடர்பில் ஊட­கங்­க­ளிடம் தெரி­வித்­துள்ள கருத்தில், புர்கா, நிகாப் அதா­வது முகத்தை திரை­யிட்டு மறைக்கும் ஆடை­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள தடை­யா­னது எந்­த­வித உள் நோக்­கங்­க­ளையும் கொண்­டது அல்ல. பல்­க­லையின் நிர்­வாகம் தமக்­கி­டையில் கலந்­தா­லோ­சித்தே இந்த முடி­வுக்கு வந்­தது.

 

ஆனால்  பல்­க­லைக்கு வெளியே இந்த முடிவு தொடர்பில் சிலர் தவ­றான அல்­லது எதிர்­ம­றை­யான விளை­வு­களை ஏற்­ப­டுத்த முயற்­சிப்­ப­தா­கவும் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

 

எவ்­வா­றா­யினும் மொறட்­டுவை பல்­க­லையின் வளா­கத்­தினுள் முகத்தை மறைக்கும் உடைக்கு மட்­டுமே தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் ஹிஜாப், அபாயா போன்ற தலை மற்றும் உடம்பின் ஏனைய பகு­தி­களை முழு­மை­யாக மறைக்கும் ஆடைக்கு தடை விதிக்­கப்­ப­ட­வில்லை. தொடர்ந்தும் மொறட்­டுவை பல்­க­லையில் ஹிஜாப், அபாயா ஆடையில் மாண­விகள் தமது கற்றல் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டலாம் என பல்­க­லையின் உப வேந்­தரை மேற்கோள் காட்டி செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

 

இந்த நிகாப் தடை தீர்­மா­ன­மா­னது பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கத்தின் முடி­வாகும். பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கத்தில் முஸ்லிம் உறுப்­பி­னர்­களின் பங்­க­ளிப்பும் இருப்­ப­தா­கவும் அவர்­களின் சம்­ம­தத்­து­ட­னேயே இந்த தடை தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தா­கவும் பல­்கலையின் உப வேந்தர் தெரி­விக்­கின்றார். இந் நிலையில் மொறட்­டுவை பல்­க­லையில் நிகாப் தடை செய்­யப்­பட்­ட­மை­யா­னது முஸ்லிம் சமூகம் சார்­பாக அப் பல்­க­லையின் நிர்­வாக சபையில் பிரதி நிதித்­துவம் செய்­துள்ள உறுப்­பி­னரின் அல்­லது உறுப்­பி­னர்­களின் பூரண சம்­ம­தத்­து­ட­னேயே எடுக்­கப்­பட்­டுள்­ளது.

 

இந் நிலையில் உள்ளூர் உரிமைக் குழுக்கள் சிலவும்,மனித உரிமை ஆர்­வ­லர்கள் சிலரும் மொறட்­டுவை பல்­க­லையின் தீர்­மா­னத்தை கண்­டிக்­கின்­றனர். மாண­வர்கள் அவர்­க­ளது மத ரீதி­யான விழு­மி­யங்­களை பின்­பற்ற அனு­மதி அளிக்­கப்­படல் வேண்டும் என அவர்கள்  தமது தரப்பு நியா­யத்தை முன்­வைக்­கின்­றனர்.

 

நாட்டில் நிகா­புக்கு எதி­ராக ஒரு குழு போர்க்­கொடி தூக்­கி­யுள்ள நிலையில் மொறட்­டுவை பல்­கலை மேற்­கொண்­டுள்ள தடை­யா­னது உள்­ளர்த்தம் அல்­லது பின்­னணி ஒன்றை கொண்­டதா என்ற சந்தேகமும் இல்லாமலில்லை. அது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் சமூகம் உள்ளது.

 

இலங்கையில்  எந்தவொரு இடத்திலும் இதுவரை நிகாப் ஆடை பகிரங்கமாக தடை செய்யப்படாத நிலையில் உயர் கல்வி நிலையமான மொறட்டுவை பல்கலைக்கழகம் எடுத்துள்ள இந்த முடிவானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.(vidi)

Web Design by Srilanka Muslims Web Team