மோடிக்கு அனுப்பவுள்ள தமிழ் கட்சிகளின் ஆவணம் இன்று கையளிக்கப்படவில்லை! - Sri Lanka Muslim

மோடிக்கு அனுப்பவுள்ள தமிழ் கட்சிகளின் ஆவணம் இன்று கையளிக்கப்படவில்லை!

Contributors

இலங்கை தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில், இந்திய பிரதமருக்காக இன்று கைளிக்கப்படவிருந்த கோரிக்கை ஆவணம், பிரிதொரு தினத்தில் கையளிக்கப்படும் என தமிழ் பேசும் கட்சிகள் தெரிவித்துள்ளன.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.

இன்று இந்த ஆவணம் கையளிக்கப் படுவதாக இருந்தபோதிலும், இந்திய உயர்ஸ்தானிகர் அவசரப் பயணமாக டெல்லி சென்றிருப்பதால் அவர் திரும்பி வந்தவுடன் குறித்த ஆவணத்தை கையளிக்க தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 18ம் திகதி இக்கடிதம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக இன்று காலை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா கைச்சாத்திட்டதோடு அனைத்து தலைவர்களும் இந்தியப் பிரதமருக்கான ஆவணத்தில் கைச்சாத்திடும் நடவடிக்கை முற்றுப்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த ஆவணத்தில் கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கையெழுத்திட்ட நிலையில் ஏனைய தமிழ்க்கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்த ஆவணத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team