யாராவது திருமணம் முடிக்க தனக்கும் விண்ணப்பம் கோருவார்களோ என்ற அச்சத்தில் எலிசபத் இலங்கை வரவில்லை - Sri Lanka Muslim

யாராவது திருமணம் முடிக்க தனக்கும் விண்ணப்பம் கோருவார்களோ என்ற அச்சத்தில் எலிசபத் இலங்கை வரவில்லை

Contributors

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கை வந்தால் அரசாங்கத்தின் அமைச்சர்கள் யாராவது திருமணம் முடிக்க தனக்கும் விண்ணப்பம் கோருவார்களோ என்ற பயத்தின் காரணமாகவே, அவர் இலங்கைக்கு சமூகமளிக்க வில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.

சிரிக்கொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன்பிள்ளை இலங்கை வந்தபோது திருமணம் முடிப்பதற்கு அரசாங்க அமைச்சர் ஒருவர் விருப்பம் தெரிவித்து, பொது அறிவித்தல் விடுத்திருந்தமை முழு உலகும் அறிந்த விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (மு)

Web Design by Srilanka Muslims Web Team