யார் யார் இலங்கையின் முன்னணி பணக்காரர்கள் - Forbes சஞ்சிகை செய்தி - Sri Lanka Muslim

யார் யார் இலங்கையின் முன்னணி பணக்காரர்கள் – Forbes சஞ்சிகை செய்தி

Contributors

 richest1
 richest5
richest3
 

இலங்கையின் தற்போதைய மிகப்பெரிய பணக்காரர் 45 வயதுடைய தம்மிக்க பெரேரா என Forbes சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதிஷ்டத்தால் இவர் இந்த நிலையை அடையவில்லை, திறமையால் இவரால் இந்த இடத்திற்கு வர முடிந்தது என அச்சஞ்சிகை மேலும் தெரிவித்துள்ளது.

1999 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டு திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு 2019 இல் இலங்கையில் இவருடைய 12 வர்த்தகங்களை முன்னணி வர்த்தகமாக மாற்றும் நோக்கில் முயற்சிகள் செய்யப்படுவதாகவும், ஏற்கனவே இலங்கையில் சுற்றுலா, வங்கி, ஆடை உட்பட 9 முன்னணி வார்த்தகங்களின் சொந்தக்காரராகவும் இவர் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான Sohli Captain (80) மற்றும் Rusi Captain (46),  ஸ்டேன்ஸன் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் ஹேரி ஜெயவர்தன (71), Carson Cumberbatch ,சிலோன் பெவரேஜ் மற்றும் பல நிறுவனங்களின் உரிமையாளரான ஹேரி செல்வநாதன் (64) – மனோ செல்வநாதன் (66) போன்றவர்களும் இலங்கையில் உள்ள அடுத்த நிலை பணக்காரர்கள் என போர்பிஸ் சஞ்சிகை மேலும் தெரிவிக்கின்றது.

மேலும் தம்மிக்க பெரேராவின் மொத்த வர்த்தகத்தின் பெறுமதி சுமார் 55 கோடி அமெரிக்க டாலர்கள் (7260 கோடி இலங்கை ரூபா) , ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான Sohli Captain மற்றும் Rusi Captain இன் மொத்த வர்த்தகத்தின் பெறுமதி சுமார் 18.5 கோடி அமெரிக்க டாலர்கள் (2442 கோடி இலங்கை ரூபா) எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

– See more at: http://www.madawalanews.com/news/srilanka/9525#sthash.P4DhLgne.dpuf

Web Design by Srilanka Muslims Web Team