யாழிலும் இன்று தொழிற்சங்க நடவடிக்கை! - Sri Lanka Muslim
Contributors

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து, நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை, இன்று (30), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10.30 மணியளவில், வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள், கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் சுகாதார துறையை அழிக்காதே, சுகாதார நிர்வாக சேவையை ஆரம்பி,விசேட கொடுப்பனவை உயர்த்து, பொது மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடு, பதவி உயர்வு முரண்பாட்டை தீர்த்து வை, பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கு, றணுக்கின் அறிக்கையை நடைமுறைப்படுத்து போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டம் காரணமாக, யாழ். நகரப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் அதனை சீர்செய்வதற்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team