'யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு' - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்! - Sri Lanka Muslim

‘யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு’ – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

Contributors

ஊசி மூலம் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களை காப்பாற்றுவதற்கு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊசி மூலம் போதைப் பொருளை ஏற்றிய மூவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் ஒருவரை வைத்தியர்கள் நீண்ட நாள் போராட்டத்தின் பின் காப்பாற்றியுள்ளனர்.

ஒருவர் ஊசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை பாவித்த பின்னர், அதே ஊசியை இன்னொருவர் இரத்த நாளத்தினூடாக ஏற்றுவதால் அதிகளவு கிருமி தொற்று ஏற்படுகின்றது.

இவ்வாறு பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது.

ஏனெனில் இரத்த நாளத்தின் ஊடாக போதைப்பொருள் உடலினுள் செல்லும்போது இருதயம் மற்றும் நுரையீரல் பகுதிகளின் கிருமித் தொற்று ஏற்படுகின்றது.

இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் உயிர் பிழைப்பது அரிதாக காணப்படுகின்ற நிலையில் காப்பாற்றப்படுபவர்கள் மீண்டும் அதே பழக்கத்தில் ஈடுபடுவது மன வருத்தத்தை தருகிறது என அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team