யாழ்-பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல் - Sri Lanka Muslim

யாழ்-பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்

Contributors

(யாழ்-ஆஷிக்)

யாழ்-பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டில் கல்விகற்கும் முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது .யாழ்-பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டில் கல்விகற்கும் தாடி வளர்த்திருந்த முஸ்லிம்  மாணவர்கள்  அந்த பல்கலைக்கழகத்தின்  மூன்றாம் ,நான்காம் வகுப்பு மாணவர்கள்  குழுவொன்றினால்  தாக்கப் பட்டுள்ளனர்.

முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் கிண்ணியாவை சேர்ந்த முஸ்லிம் மாணவர் ஒருவர் தாடி வளர்த்தமைக்காக அண்மையில் கடுமையான முறையில் தமிழ் மாணவர்  குழுவொன்றால் தாக்கபட்ட நிலையில் கடந்த திங்கள் கிழமை மூன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது . இவர்கள் குருநாகல் , கற்பிட்டி , வவுனியா பிரதேசங்களை சேர்ந்த முஸ்லிம் மாணவர்களாகும் .

முதல் மாணவர்  கடுமையாக தாக்கப் பட்ட சம்பவம் பல்கலைகழக ‘மார்சல்’ பிரிவுக்கு முறையிடப் பட்டு தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் எச்சரிக்கபட்டுள்ள நிலையில் கடந்த திங்கள் கிழமை மூன்று தாடி வளர்த்திருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளது . தாக்குதல் தொடர்பில் மார்சல் பிரிவுக்கு முறையிடப்பட்டமை தொடர்பிலும் சில உயர் வகுப்பு தமிழ் மாணவிகள் முஸ்லிம் மாணவிகளுக்கு எச்சரிக்கை செய்துள்ளதாகவும் மாணவர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்கலை கழகத்தின் தொழுகைக்காக ஒதுக்கப் பட்ட பகுதி மீது ஒயில் ஊற்றப் பட்டமை குறிப்பிடத் தக்கது .

Web Design by Srilanka Muslims Web Team