யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு - வர்த்தமானி வெளியீடு! - Sri Lanka Muslim

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு – வர்த்தமானி வெளியீடு!

Contributors

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளதாக இன்று (7) வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்த நிலையில்,  வி.மணிவண்ணன் முதல்வர் பதவியை துறந்தார்.

இதனால் உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்திருந்தார்.

யாழ் மாநகரசபையின் எதிர்காலம் குறித்து சட்டமா அதிபரிடம் வினாவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team