ரஞ்சன் விடுதலை அப்பட்டமான நாடகம்! ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கு SJB இல் மீண்டும் இடமளிக்கப் போவதில்லை – சஜித்..! - Sri Lanka Muslim

ரஞ்சன் விடுதலை அப்பட்டமான நாடகம்! ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கு SJB இல் மீண்டும் இடமளிக்கப் போவதில்லை – சஜித்..!

Contributors
author image

Editorial Team

ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என்று சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

காலி, அக்மீமன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

ஒருசிலர் ஐக்கிய மக்கள் சக்தியை விட்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் போது ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்விப்பதற்காகவே தாங்கள் கட்சி தாவியதாக தெரிவித்திருந்தனர்.,எனினும் ரஞ்சன் விடுதலை என்பது ஒரு அப்பட்டமான நாடகம். பெயரளவில் தான் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரால் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது.

அவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டிருந்தால் இன்று நாங்கள் தன்மானத்துடன் ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

ஐக்கிய மக்கள் சக்தியை விட்டும் கட்சி தாவியவர்களை மீண்டும் எந்தவொரு கட்டத்திலும் கட்சிக்குள் இணைத்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளோம்.

அவர்கள் பணத்துக்காக கட்சி மாறக்கூடியவர்கள். அவர்களை மீண்டும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் இணைத்துக் கொள்ளவே மாட்டேன் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team