ரணில் இல்லத்தில் இருந்து திருடப்பட்ட புத்தர் சிலை, புத்தகங்கள் தன்னிடம் இருப்பதாக மர்மநபர் ஒருவர் ஜனாதிபதி செயலகத்திற்கு தொலைபேசியில் அழைப்பு..! - Sri Lanka Muslim

ரணில் இல்லத்தில் இருந்து திருடப்பட்ட புத்தர் சிலை, புத்தகங்கள் தன்னிடம் இருப்பதாக மர்மநபர் ஒருவர் ஜனாதிபதி செயலகத்திற்கு தொலைபேசியில் அழைப்பு..!

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இருந்து திருடப்பட்ட புத்தர் சிலை மற்றும் புத்தகங்கள் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி செயலகத்தின் பொது இலக்கத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட புத்தர் சிலை மற்றும் புத்தகங்களை தன்னிடம் வைத்திருக்க பயமாக இருக்கிறது என்றும் அதனை உரிமையாளரிடம் மீள ஒப்படைக்க வேண்டும் எனவும் அழைப்பெடுத்த நபர் தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலை மற்றும் புத்தகங்கள் பத்திரமாக இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்த நபர்இ ஜனாதிபதியின் செயலாளரிடம் பேச விரும்புவதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அழைப்பின் மூலம் தகவலைப் பெற்றுக்கொண்ட அதிகாரிஇ ஜனாதிபதியின் செயலாளரிடம் விடயத்தை தெரிவித்ததையடுத்துஇ குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளை செயலாளர் ஒப்படைத்துள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team