ரம்புக்கனை சம்பவம்; பொலிஸார் சட்டத்திற்கு முரணான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை' - பிரசன்ன ரணதுங்க! - Sri Lanka Muslim

ரம்புக்கனை சம்பவம்; பொலிஸார் சட்டத்திற்கு முரணான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை’ – பிரசன்ன ரணதுங்க!

Contributors

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் சட்டத்திற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணையை செய்ய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று (20) கருத்து வெளியிட்ட அவர்,

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணையை விரைந்து முடித்து, அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படும். மேலும் ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் சட்டத்திற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த சம்பவத்தில் அரசியல் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே செயற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களையும் பொது மக்களையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் போராட்டக்காரர்கள் பொது நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் போது தலையிடுவது பொலிஸாரின் கடமை எனவும் அவர் கூறினார்.

சுட்டுக் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த அமைச்சர், காயமடைந்த பொதுமக்கள் மற்றும் பொலிஸாரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்

Web Design by Srilanka Muslims Web Team