ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கே.பி.கீர்த்திரத்ன உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுதலை!

Read Time:1 Minute, 1 Second

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று கேகாலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேகாலை முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட நால்வர் கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous post திங்கட்கிழமை நள்ளிரவுடன் எரிவாயு விலை குறைக்கப்படும் – லிட்ரோ அறிவிப்பு!
Next post லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம்..!