ராஜபக்சவை எதிர்த்தால்தான் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியும்! - விக்னேஸ்வரனுக்கு புத்திமதி கூறுகிறார் விஜயகாந்த். - Sri Lanka Muslim

ராஜபக்சவை எதிர்த்தால்தான் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியும்! – விக்னேஸ்வரனுக்கு புத்திமதி கூறுகிறார் விஜயகாந்த்.

Contributors

ராஜபக்சவை எதிர்த்தால்தான் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்பதை விக்னேஸ்வரனிடம் கூறிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் இலங்கையில் இனப்படுகொலையே நடைபெறவில்லை என்று கூறிவரும் ராஜபட்ச அரசை இந்தியா அங்கீகரிப்பது போல அமைந்துவிடும். எனவே இந்தக் கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்துகிறது.

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் விக்னேஸ்வரன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரது கட்டுப்பாட்டில் போலீஸ் இருக்காது என்று ஒரு நாட்டு அதிபர் கூறுகிறார் என்றால் இது என்ன கண்துடைப்பு நாடகமா? மக்கள்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ராஜபக்சவை எதிர்த்தால்தான் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்பதை விக்னேஸ்வரனிடம் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இப்போது திமுகவும், அதிமுகவும் குரல் கொடுப்பதை பிரபாகரன் உயிருடன் இருக்கும்போது கொடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. 2009இல், இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக அனைத்துக் கட்சிகளும் அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறினேன். யார் வேண்டுமானாலும் தலைமை வகித்துக்கொள்ளுங்கள் என்றேன். ஆனால், எனது பேச்சை யாரும் கேட்கவில்லை. அதை விட்டுவிட்டு இப்போது காலம் கடந்து டெசோ மாநாடு நடத்துகின்றனர் என்றார் விஜய்காந்த்.

Web Design by Srilanka Muslims Web Team