'ராஜபக்ஷ - ரணில் ஆட்சியை விரட்டுவோம்' - பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! - Sri Lanka Muslim

‘ராஜபக்ஷ – ரணில் ஆட்சியை விரட்டுவோம்’ – பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

Contributors

கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செயயக் கோரி  அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்கள், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியை தற்பொழுது (18) நடத்தி வருகின்றனர்.

இதில் ” நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உடனடியாக இரத்து செய், மக்கள் சக்தியை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்புக்காகப் போராடுவோம், இனி கடன் இல்லை, திருடப்பட்ட பணத்தை கொடு, பொருட்களின் விலை-வரிச் சுமையைத் தாங்க முடியாது, 3 வருடங்களாக முடங்கிக் கிடக்கும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உடனடியாக திற, அடக்குமுறையை நிறுத்து” என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team