ரிசாத் - ஹூனைஸ் பிளவு? வெற்றி பெற்றது யார்? - Sri Lanka Muslim

ரிசாத் – ஹூனைஸ் பிளவு? வெற்றி பெற்றது யார்?

Contributors
author image

ஊடுருவி

அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பா.உ. ஹூனைஸ் பாறுக் ஆகியோருக்கிடையில் பிளவினை ஏற்படுத்துவதற்கான சில முன்னகர்வுகள் அரசாங்க தரப்பின் ஒரு சாராரால் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் ஹூனைஸ் பாறுக்  பல வருடங்களாக இணைந்து அரசியல் செயற்பாடுகளில் பங்கு கொண்டுவரும் நிலையில் திடீர் என்று ஹூனைஸ் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பிரதி அமைச்சுப் பதிவியையும் பெறப்போகின்றார் என்ற செய்தி வன்னி முஸ்லிம்களிடத்தில் குறிப்பாக முசலிப் பிரதேச முஸ்லிம்களிடத்தில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

 

ஹூனைஸ் பாறுக்கிடம் பிரதியமைச்சுப் பதவி பெற்றுத்தருவதாகவும் அ.இ.ம.கா விட்டு வருமாறு அரசாங்கத்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

    இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். ஏனெனில்  பா.உ ஹூனைஸ் பாறுக்கின்; பேஸ்புக்கின் டைம் லைன் புகைப்படமாக மேலே குறிப்பிட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினருடன் இருப்பது போன்ற புகைப்படம் தான் முன் படமாக காணப்படுகின்றது எனவே இப்பேச்சுவார்தை உண்மையாக இருக்கலாம் என எமது இணையத்தளத்திற்கு தகவல் தந்தவர் ஆதாரமாக இதனை குறிப்பிட்டிருந்தார்.

 
பிரதியமைச்சுப் பதவியை ஒக்டோபர் 10ல் ஏற்கின்றார் ஹூனைஸ் என்று சிறு அளவிலான துண்டுப்பிரசுரங்களும் முசலிப் பிரதேசத்தில் பிரசுரமும் செய்யப்பட்டடதாம்.

 

குறிப்பாக ஹூனைஸ் பாறுக்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு விழாவுக்கு அமைச்சர் ரிசாத் அழைக்கப்படாமை. நாமல் ராஜபக்ச மற்றும் சனத் ஜெயசூரிய அழைக்கப்பட்டமை மற்றும் முசலிப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கூட்டுறவுச் சங்க கட்டிடங்களுக்கு இட்ட பெயர் போன்ற காரணங்களினால் இருவருக்குமிடையிலேயே முரண்பாடுகள்  தோற்றம் பெற்றன என பல கதைகள் உலாவிக் கொண்டிருக்கும் வேளையில்

 

தற்போதைய நிலவரம் இக்கதைகளுக்கு முற்றிலும் மாற்றமாக உள்ளதை அறியமுடிகின்றது.

 

நேற்று நாணாட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற கலச்சார மண்டபம் திறப்பு விழாவில் அமைச்சர் ரிசாத் மற்றும் ஹூனைஸ் பாறுக் ஆகியோர் வழமை போன்று அன்னியொன்னியமாக இருந்ததாக எமது தகவல் மூலம் தெரிவிக்கின்றது.

 

இதற்கு பிரதான காரணம் வடக்கில் அமைச்சர் ரிசாதின் அரசியல்  முக்கியத்துவத்தை நன்கு உணரந்துள்ள அரசாங்கத்தின் உயர்மட்டம் ஹூனைஸ் பாறுக் விடயத்தை கைவிட்டு விட்டதாக நம்பப்படுகின்றது.

 

இதற்கு இன்னொரு காரணம் வன்னி முஸ்லிம்கள் குறிப்பாக முசலி முஸ்லிம்கள் என குறிப்பிடப்படுகின்றது.

 

பா.உ ஹூனைஸ் பாறுக்கிடம் முசலிப்பிரதேச மற்றும் வன்னியின் சில முஸ்லிம் அமுக்கக் குழுக்கள் கலந்துரையாடல்கள் மேற்கொண்டதாகவும்

 

அதில் வடக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிறைவேற்றுவதற்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இருப்பின் அவசியம் தொடர்பிலும் அரசியல் ஒற்றுமை மற்றும் ஊரோடு ஒத்துப்  போகாவிட்டால் ஏற்படும் விளைவு தொடர்பிலும் பேசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

 

இவ்வாறு பல கதைகள் இருப்பினும் – எம்மிடையே ஏற்பட்ட சிறு மனக்கசப்பை பிளவாக மாற்றிவிட்டார்கள் என பா.உ ஹூனைஸ் இவ் அமுக்கக்குழுக்களிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்நிலையில் ரிசாத் ஹூனைஸ் பிளவில் வெற்றி பெற்றவர் யார்? அது நிச்சயமாக பிளவெனும் ஆரம்ப முளையை ஒற்றுமைப்டுத்தி, ஒன்றுபட்டு செயற்பட்ட வன்னி முஸ்லிம்களே!

 

Web Design by Srilanka Muslims Web Team