ரிஷாடின் கைது, நடந்தது என்ன? எத்தனை பேர் கைது? » Sri Lanka Muslim

ரிஷாடின் கைது, நடந்தது என்ன? எத்தனை பேர் கைது?

Contributors
author image

Safnee Ahamed

“தலைவர் ரிஷாட்டின் கைது, 1 வாரம் கடந்தது”
நாளைய நாள் விடுதலையுடன், வெற்றிகரமாக அமைய பிரார்த்திப்போம்!

நடந்தது என்ன? எத்தனை பேர் கைது?

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இம்மாதம் 19ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் கொழும்பு, தெஹிவளை பிரதேசத்திலிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

ரிஷாட் பதியுதீனை கைது செய்ய வேண்டிய அவசியத்தில் பலர் உள்வாங்கப்பட்டு, மிக நீண்ட நாள் போராட்டத்தின் பின்பே அவர் கைது செய்யப்பட்டார். அவரின் கைது, சில இனவாதிகளுக்கு மிக்க மகிழ்ச்சியான செய்தியாகவும் இருந்தது. முஸ்லிம் சகோதரர்கள், இனவாதிகள், அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்ட பல்வேறான போலிக் குற்றச்சாட்டுக்களின் பின்பு, அவர் மக்கள் சார்ந்த விடயமொன்றை முன்னிறுத்தி கைது செய்யப்பட்டார்.

குறிப்பாக, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு, தற்போது புத்தளத்தில் சொந்த வாழ்க்கையை நடைமுறையாக வாழ்ந்து வரும், சுமார் 11 ஆயிரம் பேரின் வாக்குரிமை வடக்கில் உள்ளதால் அவர்களின் வாக்குரிமையை கோரி, அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று (ஏலவே நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது உதவியது போல்), ரிஷாட் பதியுதீனின் அமைச்சுக்கு கீழ் இருந்த, இடம்பெயர்ந்தோர் சார் திணைக்களத்தின் ஊடாக, அரசின் முழு ஒத்துழைப்புடன் இத்திட்டம் கடன் அடிப்படையில் நிதி பெற்ற பின், அக்கடனானது மக்களால் தேர்தல் நடைபெற்று 6 நாட்களில் மீள் செலுத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தற்போதுவெளியாகியுள்ளன.

அதுவே தலைவரின் வாதமும், அவரின் விளக்கமும். இச் சம்பவத்தினூடாக ரிஷாட் பதியுதீன் நிதியை அரசிலிருந்து பெற்று, அதே நிதியை போக்குவரத்து சபையின் (அரசின்) திணைக்களத்திற்கே செலுத்தியுள்ளாரரே தவிர, தனது சொந்த பக்கட்டுக்குள் வைக்கவும் இல்லை. அவ்வாறு மக்கள் பணத்தை ஹராமாக பெறும் நபரும் அல்ல.

ஆனால், இவ் விவகாரமானது, மக்கள் பணத்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்ற அடிப்படையில், சட்டமா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாகவே, கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தலைவர் ரிஷாட் பதியுதீனுடன் சேர்ந்து தலைவரின் அலுவலக ஊழியர்கள், நண்பர்கள் என சுமார் 09 பேர் ( ஏலவே இருவர்) கைதாகி, அன்றைய நாள் 04 மணிக்கு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு, 27ஆம் திகதி வரையான 08 நாட்கள் கொண்ட விளக்கமறியலில் வைக்கும் தீர்ப்பினை, கொழும்பு கோட்டை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

அவ்வாறான நிலையில், தலைவர் ரிஷாட் கைது செய்யப்பட்ட அடுத்த தினம், மேலும் இரு பொறியிலாளர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களையும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆகையால், இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 ஆக அதிகரித்ததுடன், மேலும் ஒரு நபரை கைது செய்யுமாறும் கோரப்பட்டுள்ளதாக பத்திரிகை ஊடாக காணக் கிடைத்தது.

இவர்களின் வழக்குகள் நாளை 27 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால், அவர்களின் விடுதலைக்காக, உங்கள் பிராத்தனைகளில் இணைத்துக் கொள்ளுமாறு கோருகின்றோம்.

ரிஷாட்டை கைது செய்யும் தேவை என்ன?

ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் அரசியல் கட்சியொன்றின் தலைவர் மாத்திரமின்றி, சிறுபான்மை சமூகத்திற்குள் மிக மதிக்கக்கூடிய ஓர் அரசியல்வாதி என்பது யாவரும் அறிந்த விடயம். கடந்த 2010 (In thought) ஆம் ஆண்டு முதல் இவரின் அரசியல் வட – கிழக்கிற்கு அப்பால், நாடும் முழுவது வியாபித்துப் போனது. இதன் மூலம் சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் தனிக்கட்சி ராஜா நாடகம் மக்கள் மத்தியில் தோற்றுப் போனது யதார்த்தம்.

குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை தேவை முதல், தன்னால் இயன்ற உதவிகளை மக்கள் சேவகன் என்ற அடிப்படையில் மேற்கொண்டார். அதன் பின்னர், முஸ்லிம் சமூகத்தின் மீது இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களின் போது, அதை தடுக்கும் நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக களமிறங்கி செயற்பட்டார். முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதிகளின் கோஷங்களுக்கு எதிராக மிக தீவிரமாக செயற்பட்டு, முஸ்லிம் மக்களின் அரசியல் காவலனாய், இறைவனின் உதவியுடன் செயற்பட்டார்.

2014 ஆம் ஆண்டு ஞானசார தேரர், வடக்கில் தலைவர் ரிஷாட் பதியுதீனினால் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் “காடுகள் அழிக்கப்பட்டு, மீள்குடியேற்றம் செய்யப்பட்டது” என்ற கோஷங்கள் மிகத் தீவிரமாக, இனவாத நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. ரிஷாட் பதியுதீன் மீதான இனவாத விஷமிகளின் அட்டூழியங்கள், கைது கோஷங்கள், கைது நாள் வரைக்கும் தொடர்ந்து கொண்டே சென்றது.

அதற்கிடையில் சில முஸ்லிம் அரசியல்வாதிகளினால் கழ்ப்புணர்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நாடகங்களுமே, இந்த கைது கோஷங்களுக்கு பின்னால் உள்ள இனவாதிகளின் ஆட்டமாகும்.

அதன் பின்னர், 52 நாள் அரசியல் புரட்சியின் பின்னர் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீதான கோபங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கும் பொழுது, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் நடைபெற்றன் பின்னர், முஸ்லிம் சமூகத்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்த வேளை, ரிஷாட் பதியுதீன் மீதான பழைய கோஷங்களை கொட்டித் தீர்க்க சரியான வாய்ப்பாக, ஏப்ரல் 21 தாக்குதல் மீதான போலிக் குற்றச்சாட்டுக்கள் ரிஷாட் மீது அம்புகளாக எறியப்பட்டது. அது மாத்திரமின்றி, அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் சுமார் 05 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு, இறுதியில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் வெளியேறினார்.

“சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் இறைவன்”. ஆகையால், தலைவர் ரிஷாதட் மீதான வழக்கு நாளை (27) எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால், உங்கள் பிராத்தனைகளை தலைவர் ரிஷாட் விடுதலையாக வேண்டும் என பிரார்த்திப்பதுடன், இனவாதிகளும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டோர்களும் தோல்வியடைய வேண்டும் என்ற பிரார்த்தனைகளில் ஈடுபடுங்கள் .

தலைவரின் தொண்டனாய்,

Web Design by The Design Lanka