ரிஷாடின் விடுதலைக்காக வாய் திறக்காத அதாவுல்லாவை கட்சியிலிருந்து கொண்டே விமர்சித்த தே.கா உயர்பீட உறுப்பினர் அலரி ரிபாஸ்..! - Sri Lanka Muslim

ரிஷாடின் விடுதலைக்காக வாய் திறக்காத அதாவுல்லாவை கட்சியிலிருந்து கொண்டே விமர்சித்த தே.கா உயர்பீட உறுப்பினர் அலரி ரிபாஸ்..!

Contributors

அருமைத்தலைவன்
அதாஉல்லா
ஆறுமாதங்களாக அடைக்கப்பட்டிருந்த றிஷாத்பதியூதீனின் அநியாயக் கைது தொடர்பில்
ஆறுதலுக்காகவேனும் ஆறேழு வார்த்தைகள் பேசவில்லை

அவரின் அரசியல் எதிரியாகிய ரவூப்ஹக்கீம் பயங்கரவாதத் தடைச்சட்டம் பற்றியும் அரசியல் கைதின் வஞ்சகம் பற்றியும் ஆழமாக பேசினார்
அரசியல் நாகரீகத்தை பேணினார்

எத்தனையோ தலைவர்கள் பேசினார்கள்
எனதருமைத்தலைவன் மட்டும் மருந்துக்குக்கூட திருவாய் மலரவில்லை

உதயகம்மன்விலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது உருக்கமாக உரையாற்றி நாட்டுபற்றாளன் என்ற நற்சான்றுப்பத்திரமும் வழங்கினான்
நமது சகோதரனுக்காக நாலுவார்த்தைகள் கிடைக்காமல் போயிற்று

நாளை ஒருநாள் நமக்கேதும் நடந்தாலும் நாலுபேர் வாய்திறக்கமாட்டார்கள்
மனோகணேசன் முகத்தில் தண்ணீரை தட்டிவிட்டபோது முன்வராதது போல

உதயகம்மன்பில,விமல்வீரவங்ச,வாசுதேவ நாணயக்கார போன்ற இனவாதக்கூட்டாளிகளின் கூட்டு
குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியகதையாகத்தான் போய்முடியும்

தலைவரே
றிஷாத்பதியூதீன் பிணையில் வெளிவந்து விட்டார்
போராடி வென்றிருக்கிறார்
அனுதாப அலையில் மிதக்கிறார்

அம்பாரை மாவட்டத்தில் அடுத்ததொரு தேர்தலில் அவரின் கட்சி ஐம்பதாயிரம் வாக்குகளை அண்மித்து விடும்
அப்போது
நமது வாக்குகள்?
நமது அரசியல் எதிர்காலம்?

Web Design by Srilanka Muslims Web Team