ரிஷாத் வீட்டில் நிகழ்ந்த சிறுமியின் தற்கொலையை அரசியல் மயமாக்கவும், இனவெறி வெளிச்சத்தில் பயன்படுத்தவும் முயற்சிக்கின்றனர் - SJB ஊடக அறிக்கை..! - Sri Lanka Muslim

ரிஷாத் வீட்டில் நிகழ்ந்த சிறுமியின் தற்கொலையை அரசியல் மயமாக்கவும், இனவெறி வெளிச்சத்தில் பயன்படுத்தவும் முயற்சிக்கின்றனர் – SJB ஊடக அறிக்கை..!

Contributors

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்ட ஊடக அறிக்கை.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் தற்கொலை குறித்து ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.  சில தரப்பு இந்த சம்பவத்தை அரசியல்மயமாக்க முயன்றன.  மற்றத்தரப்பு இந்த துயரமான சம்பவத்தை இனவெறி வெளிச்சத்தில் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இரு தரப்பினரின் நோக்கங்களையும் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் நியாயமான விசாரணையை நடத்தி தாமதமின்றி சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை மூலம் மட்டுமே வேதனைக்குள்ளான தரப்புக்கு நீதி கிடைக்க முடியும்.  இதுபோன்ற ஒரு செயல்பாட்டில், சமூகத்தில் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்கவும், சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் இது உதவும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஊடகப் பிரிவு 

ஐக்கிய மக்கள் சக்தி

Web Design by Srilanka Muslims Web Team